பிரபல மலையாள நடிகை அர்ச்சனா கவி. நீலத்தாமரா படத்தில் அறிமுகமான இவர் அதன் பிறகு மம்மி அண்ட் மீ, பெஸ்ட் ஆப் லக், பேக் பென்ஞ் ஸ்டூடன்ட் உள்பட 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் அரவான், ஞானகிருக்கன் படங்களில் நடித்திருந்தார்.
இவ்வாறுஇருக்கையில் இரவில் ஆட்டோவில் பயணித்த இவரிடம் போலீசார் அத்துமீறி நடந்துள்ளனர்.
மேலும் இதுகுறித்து அவர் சமூகவலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில், நான், என் குடும்ப நண்பர் ஜெஸ்னா, அவருடைய இரண்டு மகள்களுடன் மிலானாவிலிருந்து ஆட்டோவில் திரும்பிக் கொண்டிருந்தோம். கொச்சி துறைமுக போலீஸார் எங்களை நிறுத்தி கேள்வி கேட்டனர்.
நாங்கள் அனைவரும் பெண்கள் என்றும் எங்களிடம் அநாகரிகமாக நடந்து கொண்டனர். அவர்கள் கேள்வி கேட்டதில் நாங்கள் பாதுகாப்பாக உணரவில்லை. நாங்கள் வீட்டுக்குப் போய்க் கொண்டிருக்கிறோம் என்றதும் ஏன் வீட்டுக்குப் போகிறீர்கள்? என்று கேட்டார்கள். மேலும் அவர்கள் விசாரித்ததில் எந்த பிரச்சினையும் இல்லை. அது அவர்கள் கடமை. ஆனால், கேள்விகேட்ட முறை, சரியானதாக இல்லை.
எந்த வாகனத்தில் வருகிறோம் என்பதை வைத்து போலீஸார், மக்களை எடை போடக் கூடாது. கணிவாக நடந்து கொள்ள வேண்டும். அவர்கள் எங்கள் மீது சந்தேகமடைந்து வீடுவரை பின் தொடர்ந்து வந்தார்கள். அவர்கள் அணுகுமுறையும் நடந்துகொண்ட விதமும் மோசமான அனுபவமாக இருந்தது.
எனினும் இவ்வாறு அர்ச்சனா கவி எழுதி உள்ளார்.மேலும் இதுகுறித்து அவர் போலீசில் புகார் அளிக்கவில்லை. தனது இந்த பதிவை கேரள உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு டேக் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Listen News!