பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இந்த வார நாமினேஷன் பட்டியலில் அசீம், ஏடிகே, ஜனனி, கதிரவன், ராம், ஆயிஷா ஆகிய ஆறு போட்டியாளர்கள் இடம்பெற்று உள்ளனர்.இந்த வாரம் டபுள் எவிக்ஷன் என்பதால் யார் வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாகவே காணப்படுகின்றது.
இதனடிப்படையில் குறைந்த வாக்குகளைப் பெற்றிருக்கும் ராம் மற்றும் ஆயிஷா ஆகியோரே பிக்பாஸ் வீட்டை விட்டு வெியேறுவார்கள் என்று கூறப்படுகின்றது.இது தவிர நிகழ்ச்சி ஆரம்பித்து 60 நாட்கள் ஆகியும் இன்னும் வைல்ட்காட் என்ட்ரியாக யாரும் இன்னும் உள்ளே செல்லவில்லை.
இது ஒரு புறம் இருக்க கதாப்பாத்திரங்களாக போட்டியாளர்கள் மாறி தமக்கு தரப்பட்ட கதாப்பாத்திரங்களாக நடித்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் இந்த வாரம் வேஸ்ட் பொஃபோமர் விக்ரமன் தான் என மணிகண்டன் கூறி விடுகின்றார். இதனை சற்றும் எதிர்பாராத அவர் விக்ரமன் மணிகண்டனுடன் மோதலில் ஈடுபட்டு வருவதைக் காணலாம்.
Listen News!