• Sep 20 2024

அரசியல் ஒன்றும் விளையாட்டில்லை, விஜய்க்கு தன்னுடைய ஸ்பெஷல் அறிவுரையைக் கொடுத்த கமல்ஹாசன்

stella / 10 months ago

Advertisement

Listen News!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த அகடோபர் மாதம் வெளியாகியிருந்த திரைப்படம் தான் லியோ. LCU-ன் கீழ் உருவான இந்தப் படம், கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் 550 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து மாஸ் காட்டியது. இதனால் அண்மையில் இப்படத்திற்கான வெற்றி விழாவும் பிரமாண்டமாக நடைபெற்றது.

இந்த விழாவில் பேசிய விஜய், தனது அரசியல் பயணம் குறித்து மறைமுகமாகக் கூறினார். சில மாதங்களுக்கு முன்னர் 234 தொகுதிகளில் முதல் இரண்டு இடங்களை பிடித்த 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நிதியுதவி செய்திருந்தார். இன்னொரு பக்கம் விஜய் மக்கள் இயக்கம், தீவிரமாக களப்பணியாற்றத் தொடங்கியுள்ளது.


 அதேபோல் “2026ல் கப்பு முக்கியம் பிகிலு” என லியோ சக்சஸ் மீட்டில் விஜய் பேசியதும் கவனம் ஈர்த்தது.சினிமாவில் பிஸியாக இருந்தாலும் அரசியல் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார். இதனால் இயக்குநர் வெற்றிமாறன் உள்ளிட்ட பலரும் விஜய்யின் அரசியல் ஆசை குறித்து கருத்துத் தெரிவித்திருந்தனர். 


அந்த வகையில் கமல்ஹாசனும் தற்போது விஜய்க்கு அட்வைஸ் செய்துள்ளார். அதாவது, விஜய் அரசியலை விளையாட்டாக எடுத்துக்கொள்ளக் கூடாது என கூறியுள்ளார்.மேலும், அரசியலில் வருவதற்கான தகுதியையும் உத்வேகத்தையும் விஜய் வளர்த்துக்கொள்ள வேண்டும். மற்றபடி அவரை அரசியலுக்கு வரும்படி அழைப்புவிடுத்து பல நாட்கள் ஆகிவிட்டதாக கமல் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.


Advertisement

Advertisement