• Nov 19 2024

’காதல் தேசம்’ படத்தின் அப்பட்டமான காப்பி.. ‘பொன் ஒன்று கண்டேன்’ விமர்சனம்..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

கடந்த 1996 ஆம் ஆண்டு அப்பாஸ், வினித், தபு நடித்த ’காதல் தேசம்’ என்ற திரைப்படம் ஒரு முக்கோண காதல் படமாக இருந்த நிலையில் அந்த படத்தை அப்படியே காப்பி அடித்து தற்போதைய டெக்னாலஜியை கொஞ்சம் புகுத்தி எடுக்கப்பட்ட படம் தான் பொன் ஒன்று கண்டேன்’

மகப்பேறு மருத்துவர் அசோக் செல்வன் மற்றும் வசந்த் ரவி ஆகிய இருவரும்  ஐஸ்வர்யா லட்சுமி காதலிக்கின்றனர். இந்த மூவர் வாழ்க்கையில் நடக்கும் முக்கோண காதல் கதை தான் ‘பொன் ஒன்று கண்டேன்’ படத்தின் ஒன்லைன் கதை

சிறுவயதில் ஐஸ்வர்யாவின் காதலுக்காக அசோக் செல்வன் மற்றும் வசந்த் ரவி ஆகியோர் அடித்துக் கொண்ட நிலையில் பல ஆண்டுகள் கழித்து முன்னாள் மாணவர்கள் கூடும் நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொள்ளும்போது அவர்களுக்குள் நட்பு மலர்கிறது. இந்த நிலையில் வசந்த் ரவியின் தாயார் உடல்நிலை மோசமானதை அடுத்து அவரை சென்னைக்கு வர வைக்கும் அசோக் செல்வன் அவருக்கு அங்கேயே சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்கிறார்

இந்த நிலையில் தான் அசோக் செல்வனின் முன்னாள் மனைவி தான் ஐஸ்வர்யா லட்சுமி என்று தெரியவரும் நிலையில் அடுத்தது என்ன என்பதுதான் இந்த படத்தின் இரண்டாம் பாதி கதை



முதல் முதலாக வசந்த் ரவிக்கு கத்தி இன்றி  ரத்தம் இன்றி  ஒரு ஜாலியான கேரக்டர் கொடுக்கப்பட்டிருந்தாலும் அவரது செயற்கை தனமான நடிப்பு அவரது கேரக்டருக்கு பொருத்தமாக இல்லை. ஐஸ்வர்யா லட்சுமி, செஃப் கேரக்டரில் நடித்துள்ள  நிலையில் இரண்டு நண்பர்கள் மத்தியில் ஏற்படும் காதல் ஈர்ப்பு என்ற குழப்பமான கேரக்டரில் நன்றாகவே செய்துள்ளார். அசோக் செல்வமும் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார் என்றாலும் திரைக்கதை மிகவும் வீக்காக இருப்பதால் அவருடைய நடிப்பும் வீணாகிறது

அசோக் செல்வன் கனவில் ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் வசந்த் ரவி டூயட் பாடுவது, வசந்த் ரவி கனவில் ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் அசோக் செல்வன் டூயட் பாடுவது என பழைய கால படங்களில் இருப்பது போல் எதற்கெடுத்தாலும் பாடல் என்று ஒரு சலிப்பு தட்டுகிறது. யுவன் சங்கர் ராஜாவின் பாடல்களில் ஒரு பாடல் கூட தேறவில்லை என்பதும் பின்னணி இசையும் மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது

முக்கோண காதல் என்பதுதான் இந்த படத்தின் கதை என்பது தெரிந்த உடனே சலிப்பு ஏற்படுகிறது. அழுத்தமான காட்சிகள் இல்லாதது, அசோக்செல்வன் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி பிரிவதற்கு என்ன காரணம் என்று சொல்லாமல் இருப்பது, பிரிந்தபின் மீண்டும் ஒருவர் மீது ஒருவருக்கு ஈர்ப்பு வருவதற்கும் என்ன காரணம் என்பதை சொல்லாமல் இருப்பது படத்தின் வீக்காக கருதப்படுகிறது

மொத்தத்தில் அப்பாஸ், வினித் ஆகிய இரண்டு நண்பர்களில் யாரை தேர்வு செய்வது என்ற குழப்பத்தில் தபு நடித்த ’காதல் தேசம்’ திரைப்படத்தின் பல காட்சிகள் இந்த படம் ஞாபகப்படுத்துவதை தவிர்க்க முடியவில்லை.

Advertisement

Advertisement