• Sep 20 2024

'பொன்னியின் செல்வன் 2' ஆடியோ லான்ச் ...வெளியான லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

'பொன்னியின் செல்வன் 2' இசைவெளியீட்டு விழா இன்னும் சில நிமிடங்களில் ஆரம்பிக்க உள்ள நிலையில், இதற்கான ஏற்பாடுகள் எப்படி செய்யப்பட்டிருக்கிறது? என்பதை தெரிந்துகொள்ளும் விதமாக வெளியாகியுள்ள புகைப்படங்கள் இதோ.

 இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் அவரின் கனவு படமாக உருவாகியுள்ளது, 'பொன்னியின் செல்வன்'. அத்தோடு இப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியான நிலையில், இரண்டாம் பாகம் அடுத்த மாதம் ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாக உள்ளது.


எனவே 'பொன்னியின் செல்வன் 2' படத்தின், ப்ரோமோஷன் பணிகள் சூடு பிடிக்க ஆரம்பமாகி உள்ளது. அதன் ஒரு பகுதியாக இன்று, இப்படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா படு பிரமாண்டமாக நடைபெற உள்ளது.மேலும் இதில் தமிழ் திரையுலகை சேர்ந்த மிக முக்கியமான பிரபலங்களான  கமல் ஹாசன் கலந்து கொள்வது உறுதியாகியுள்ள நிலையில், ரஜினிகாந்தும் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.கல்கியில் வரலாற்று காவியமாக எழுதப்பட்ட பொன்னியின் செல்வன் நாவலை தழுவி எடுக்கப்பட்ட இந்த படத்தில், ராஜராஜ சோழனாக நடிகர் ஜெயம் ரவி நடித்துள்ளார்.


அத்தோடு கார்த்தி வந்திய தேவனாகவும் , விக்ரம் ஆதித்த கரிகாலனாகவும் நடித்துள்ளார். அத்தோடு  திரிஷா குந்தவையாகவும், ஐஸ்வர்யா ராய், நந்தினி மற்றும் ஊமை ராணி  என இரட்டை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து, பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், அடுத்த மாதம் வெளியாகும் இப்படத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். 


அத்தோடு இன்னும் சில மணி நேரங்களில், சென்னை நேரு ஸ்டேடியத்தில் 'பொன்னியின் செல்வன் 2' படத்தின் இசை வெளியீட்டு விழா துவக்க உள்ள நிலையில், விழா மேடை வண்ண வண்ண மின் விளக்குகளால் ஜொலிக்க, ரசிகர்களும் ஏகோபித்த எதிர்பார்ப்புகளுடன் விழாவை காண சென்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement