பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் இன்று திரையில் வெளியான நிலையில்,பயில்வான் ரங்கநாதன் படத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.பொன்னியின் செல்வன் முதல் பகுதி பார்த்தவர்களுக்கு கதை புரியும், இரண்டாம் பகுதியை மட்டும் பார்ப்பவவர்களுக்கு கதை புரியாமல் தலைசுற்றும்.
இந்த படத்தில் சோழ நாட்டு இளவரசன் விக்ரம், சிறுவயதில் இருந்தே நந்தினி என்கிற ஐஸ்வர்யா ராயை காதலிக்கிறார். இந்த விஷயம் அரச குடும்பத்திற்கு தெரியவர, அரண்மனையில் இருந்து ஐஸ்வர்யா ராய் வெளியேற்றப்படுகிறார்.
சோழ நாட்டு ராஜ்ஜியத்தின் மீது ஆசை கொள்ளும் ஐஸ்வர்யா ராய், அந்த ஆசையை தீர்த்துக்கொள்வதற்காக வயதான சரத்குமாரை திருமணம் செய்து கொள்கிறார். ஐஸ்வர்யா ராய் அழகு பசுமையாக காட்ட பல காட்சிகளில் மேக்கப் அதிகமாக போடப்பட்டுள்ளது. சில காட்சிகளில் அவர் நடிப்பு சரியில்லை, சில காட்சிகளில் நன்றாக நடித்து இருக்கிறார் ஐஸ்வர்யா ராய்.
ராஜ்ஜியத்திற்காக சரத்குமாரை ஐஸ்வர்யா ராய் திருமணம் செய்து கொள்கிறார். சரத்குமார் விக்ரமுக்கு தாத்தா முறை வருகிறது என்றால், ஐஸ்வர்யா ராய் பாட்டி முறைதானே வரும். ஆனால், கிளைமாக்ஸ் காட்சியில், ஐஸ்வர்யா ராயை கட்டிபிடித்துக்கொண்டு இறந்து போகிறார் விக்ரம். படம் பார்ப்பவர்களுக்கு இது என்ன கொடுமை, பாட்டியை காதலிப்பதா, கட்டிப்பிடிப்பதா அசிங்கமாக இல்லையா என்று தோன்றுகிறது.
இதில் மூத்த ராஜாவாக வரும் பிரகாஷ் ராஜ், ஐஸ்வர்யா ராய் அம்மாவை காதலித்து ஏமாற்றிவிடுகிறார். ஆனால், ஐஸ்வர்யா ராயின் அப்பா பாண்டிய மன்னர் நாசர், அவரைத்தான் ஐஸ்வர்யா ராயின் காதலன் என நினைத்து, குடிசைக்குள் வைத்து விக்ரம் கொன்றுவிடுகிறார். ஐஸ்வர்யா ராய் அம்மாவை பிரகாஷ் ராஜை காதலி என்றால், ஐஸ்வர்யா ராய் விக்ரமிற்கு தங்கை முறைதானே வரவேண்டும் இப்படி படத்தில் ஏகப்பட்ட குழப்பம் ஒரு கட்டத்தில் ஒன்றுமே புரியவில்லை.
இந்த படத்தில் ராஜாக்கள், இளவரசர்கள், தளபதிகள் என அனைவருமே அயோக்கியன் என்று மணிரத்னம் சொல்லி இருக்கிறார். ஒரு கதாபாத்திரம் கூட நல்லவன் என்று சொல்லும் அளவுக்கு இல்லை. இப்படி தமிழகர்களை அவமானப்படுத்தும் ஒரு படத்தை மணிரத்னம் ஏன் இயக்கினார் என்பதே கேள்விக்குறியாக உள்ளது. வந்தியதேவன் கதாபாத்திரம் இவ்வளவு மோசமாக இருந்ததால் தான் எம்ஜிஆர் இந்த படத்தில் நடிக்கவில்லையோ என்ற சந்தேகம் கூட ஏற்படுகிறது.
வயதான சரத்குமாரை ஐஸ்வர்யா திருமணம் செய்து கொண்டாலும், அவரது மனதில் பல ஆண்கள் இருக்கிறார்கள் இது என்ன என்றே தெரியவில்லை. தமிழ் பெண்களை இழிப்படுத்தும் நோக்கத்தில் திட்டமிட்டே கல்கி இந்த நாவலை எழுதினாரா... இல்லை தமிழகர்களை இழிப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் மணிரத்னம் இந்த படத்தை எடுத்தாரா என்பது புரியவே இல்லை. சேரர், சோழர், பாண்டிய மன்னர்கள் என்று நாம் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு இருந்ததை தவிடுபோடியாக்கிவிட்டார் மணிரத்னம்.
சேரர், சோழன், பாண்டியை அசிங்கப்படுத்துவதற்காவே கல்கி இந்த நாவலை எழுதினார் என்று அண்ணாவே அந்த காலத்தில் குற்றம்சாட்டி இருந்தார். இதனால், தான் திராவிட இயக்கத்தலைவர்கள் கல்கியின் பொன்னியின் செல்வனை ஆதரிக்கவே இல்லை. பல்வேறு கட்டங்களில் பல திராவிட இயக்கத் தலைவர்கள் பொன்னியின் செல்வன் நாவலை விமர்சித்தார்கள்.
அந்த அடிப்படையில் தான் பேரறிஞர் அண்ணா, பொன்னியின் செல்வன் படத்தில் எம்ஜிஆரை நடிக்காதீர்கள், பொன்னியின் செல்வன் தமிழகர்களுக்கு விரோதமான நாவல் என்று சொன்னார். அதை மணிரத்னம் இன்று நிரூபித்துள்ளார். பொன்னியின் செல்வன் இரண்டு ஏமாற்றம் தான் மிஞ்சுகிறது என்று பயில்வான் ரங்கநாதன் படம் குறித்து பல விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
Listen News!