• Nov 14 2024

மாஸாக நடந்து வரும் 'பொன்னியின் செல்வன்' புக்கிங்... வெளிநாட்டில் மட்டும் இத்தனை கோடியாம்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குநர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் மணிரத்னம். இவர் வித்தியாசமான கதையம்சத்தைக் கொண்ட படங்களை இயக்குவதில் கைதேர்ந்தவராக விளங்கி வருகின்றார்.

அந்த வகையில் கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவலை மையமாக கொண்டு அதே பெயரில் தற்போது படத்தினையும் இயக்கி முடித்துள்ளார்.


அதுமட்டுமல்லாது இந்த பிரம்மாண்ட படத்தை இயக்கியதன் மூலம் சாதனையும் செய்துவிட்டார் மணிரத்னம். காரணம் கல்கியின் இந்த நாவலை படமாக இயக்க பலரும் முயற்சித்தார்கள், ஆனால் மணிரத்னத்தால் மட்டுமே அது முடிந்துள்ளது.


இவரின் கனவுப் படமான இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ், ஜெயராம், பார்த்திபன் என பெரிய நடிகர்கள் பட்டாளமே நடித்துள்ளார்கள்.

மேலும் ரூ. 500 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ள இப்படமானது வருகின்ற செப்டம்பர் 30-ஆம் திகதி படு பிரம்மாண்டமாக வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்வுகளுக்காக சென்னையில் இருந்து படக்குழுவினர் அடுத்தடுத்து கேரளா, ஹைதராபாத், மும்பை என பல இடங்களுக்கும் சென்று கொண்டிருக்கிறார்கள்.


அந்தவகையில் கடைசியாக மும்பையில் ப்ரஸ் மீட் ஒன்றில் கலந்து கொண்டிருக்கின்றார்கள். அந்த ப்ரஸ் மீட்டில் குறிப்பாக நடிகர் விக்ரம் தஞ்சையில் உள்ள கோவில்களின் பெருமையை பற்றிப் பேச அரங்கமே அதனை அசந்து கேட்டுள்ளனர்.


இவ்வாறாக பல எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் உருவாகியுள்ள இப்படமானது ரிலீஸ் ஆக இன்னும் ஒரு சில நாட்களே இருக்கும் நேரத்தில் புக்கிங்கும் மாஸாக நடந்து வருகிறது. அந்தவகையில் வெளிநாட்டில் படத்தின் புக்கிங் மட்டுமே இதுவரை ரூ. 10 கோடிக்கு மேல் வந்துள்ளதாக அதிரடியாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement