• Sep 21 2024

பொன்னியின் செல்வனை வீழ்த்த முடியாது.. பிரபல இயக்குநரின் அதிரடிப் பேச்சு..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

 பொன்னியின் செல்வன் படத்துடன் விக்ரம் வேதா இந்தி திரைப்படம்  நாளை செப்டம்பர் 30 தல் திரையரங்குகளில் மோதுகிறது.

கமல்ஹாசனின் விக்ரம் படத்துக்கு இந்தி பெல்டில் மிகப்பெரிய வசூல் அமையவில்லை. ஆனால், பொன்னியின் செல்வன் படத்துக்கு இந்தியிலும் வசூல் பெறவேண்டியது கட்டாயமாக இருக்கின்றது.

அதற்கு தடையாக புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் ஹ்ரித்திக் ரோஷன், சைஃப் அலி கான் நடித்துள்ள விக்ரம் வேதா நிச்சயம் இருக்குமென தெரிகிறது.

புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் தமிழில் விஜய்சேதுபதி, மாதவன் நடித்த விக்ரம் வேதா திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. அத்தோடு இந்தியா முழுவதும் ஏகப்பட்ட ரசிகர்கள் அந்த படத்தை பார்த்து கொண்டாடி உள்ளனர். பாலிவுட் நடிகர்கள் தென்னிந்திய படங்களை ரீமேக் செய்து வரும் நிலையில், ஹ்ரித்திக் ரோஷன் இந்த படத்தை ரீமேக் செய்து நடித்துள்ளார்.

தமிழில் விக்ரம் வேதா திரைப்படம் மொத்தமே 13 கோடி ரூபாயில் தான் எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், ஹ்ரித்திக் ரோஷன், சைஃப் அலி கான், ராதிகா ஆப்தே  பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்த படம் 175 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.



அத்தோடு செப்டம்பர் 30ம் தேதி பொன்னியின் செல்வன் மற்றும் விக்ரம் வேதா திரைப்படங்களுக்கு இடையே இந்தி பெல்ட்டில் மிகப்பெரிய போட்டி நிலவும் என்பது கன்ஃபார்ம். ரீமேக் படமான விக்ரம் வேதா படத்துக்கு ரசிகர்கள் முக்கியத்துவம் கொடுக்கப் போகிறார்களா? அல்லது வரலாற்று படமான பொன்னியின் செல்வன் படத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப் போகிறார்களா என எதிர்பார்ப்புகள் எகிறி வருகின்றன.



இவ்வாறுஇருக்கையில், செய்தியாளர்களை சந்தித்து பேசிய விக்ரம் வேதா இயக்குநர் புஷ்கரிடம் விக்ரம் வேதா, பொன்னியின் செல்வன் என இரு பெரிய படங்கள் இந்த வெள்ளிக்கிழமை வருகிறது. அந்த படத்துடன் மோதி வெல்ல முடியுமா? என்கிற கேள்வியை முன் வைத்தனர். அதற்கு சிரித்துக் கொண்டே பதில் அளித்த புஷ்கர், பொன்னியின் செல்வன் பிரம்மாண்ட படம், தமிழர்களின் பெருமை அதனை வீழ்த்த முடியாதென்று பேசியதும் ஹ்ரித்திக் ரோஷனின் ரியாக்‌ஷனே மாறிவிட்டது.



அத்தோடு பொன்னியின் செல்வன் படத்துடன் மோதல் எல்லாம் இல்லைங்க, இரண்டு படங்களையும் பாருங்க, பொன்னியின் செல்வன் படத்துக்கு டிக்கெட் கிடைக்காதவங்க முதலில் எங்க படத்தை பாருங்க, முதலில் பொன்னியின் செல்வன் படம் பார்க்குறவங்க அடுத்து வார இறுதி நாட்களில் விக்ரம் வேதா படம் பார்க்க வாங்க என்று இயக்குநர் சொன்னதும் தான் ஹ்ரித்திக் ரோஷனுக்கு மூச்சே வந்தது. இதன் பின்னர் சைஃப் அலி கானும், ஹ்ரித்திக் ரோஷனும் இணைந்து கொண்டு இரண்டு படங்களையுமே பாருங்கள் என கோரிக்கை விடுத்தனர்.


Advertisement

Advertisement