• Sep 20 2024

ஹைதராபாத்தில் மும்முராமாக ப்ரமோஷன் பணியில் ஈடுபடும் பொன்னியின் செல்வன் பிரபலங்கள்- வெளியாகிய லேட்டஸ்ட் கிளிக்ஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் மணிரத்னத்தின் கனவு படமாக உருவாகியுள்ளது 'பொன்னியின் செல்வன்' 2 பாடங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதி, உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில், இரண்டாம் பாகம் அடுத்த வருடம் வெளியாகும் என்பதையும் இப்போதே அறிவித்துவிட்டது படக்குழு.


படத்தின் மீதான, எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்யும் விதமாக, தினம் தோறும்... இந்த படத்தின் காட்சிகள் அடங்கிய புரோமோ வெளியாகி வரும் நிலையில், நேற்றைய தினம் இந்த படத்தில் இடம்பெற்ற 'தேவராளன் ஆட்டம்' என்கிற லிரிக்கல் வீடியோ பாடலை படக்குழு வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.


 ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தின் ப்ரமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக களம் இறங்கியுள்ளது. அந்த வகையில் ஹைதராபாத்தில் நடைபெற்ற ப்ரமோஷன் நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement