• Sep 21 2024

இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்யவுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படக்குழு- அட இது தான் காரணமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில், கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவலை  அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் தான் பொன்னியின் செல்வன்.இத்திரைப்படத்தை இயக்குநர் மணிரத்னம் இயக்கியுள்ளார்.லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படத்தில், விக்ரம், ஜெயம்ரவி, கார்த்தி, சரத்குமார், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர். ஏ.ஆர்.இசையமைத்துள்ள இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சமீபத்தில் பொன்னி நதி என்ற பாடல் ரிலீஸானது.


இந்த நிலையில், பான் இந்தியா படமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் புரமோஷனுக்கு செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, இப்படத்தை புரமோஷன் செய்யவுள்ளனர்.

இப்படம் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது . இதனால் ரசிகர்களும் செம கொண்டாட்டத்தில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement