• Sep 20 2024

பொன்னியின் செல்வன் படத்தின் மேக்கிங் வீடியோ ரிலீஸ்- ஆதித்த கரிகாலன் விக்ரம் எப்படி ஆடியிருக்கிறார் என்று பாருங்க

stella / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் பொன்னியின் செல்வன்.இந்தப் படத்தை லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இத் திரைப்படம் இரண்டு பாகங்களாக பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.

அதன் முதல்பாகம் செப்டம்பர் மாதம் 30ம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கு, ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இப்படத்திற்கு ஏ.‌ ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.


ஏற்கனவே இந்த படத்தின் முதல் இரண்டு சிங்கிள் பாடல்கள் வெளியாகி உள்ளன.‌ பொன்னி நதி மற்றும் சோழா சோழா ஆகிய இரண்டு பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன.

இந்தப் படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரமும், வந்தியத்தேவனாக கார்த்தியும், ராஜ ராஜ சோழனாக ஜெயம் ரவியும் நடிக்கின்றனர். நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடிக்கின்றனர்

இந்நிலையில் இந்த படத்தின் சோழா சோழா பாடலின் புதிய மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடலுக்கு விக்ரம் நடனம் ஆடும் வீடியோவில் இயக்குநர் மணிரத்னம் தோன்றும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. பிருந்தா மாஸ்டர் இந்த பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார்.





Advertisement

Advertisement