பொன்னியின் செல்வன் படத்தின் புதிய ப்ரோமோ வீடியோ கிளிம்ப்ஸ் வெளியாகி உள்ளது.
இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான மணி ரத்னம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகி வெளியான திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். இப்படத்தின் முதல் பாகமானது செப்டம்பர் 30 ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் முதல் லுக் கதாபாத்திர போஸ்டர்கள், டீசர், ட்ரெய்லர், பாடல்கள் என்பன அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.இந்த படத்தின் எடிட்டிங்கை ஸ்ரீகர் பிரசாத் கவனித்து வருகிறார், கலை இயக்குநராக தோட்டா தரணி பணிபுரிந்துள்ளார்.
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தின் ரிலீஸிக்கு 3 நாட்களே உள்ள நிலையில் படத்தின் புதிய காட்சிகள் அடங்கிய ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. ஆதித்த கரிகாலன் விக்ரம், வந்தியத்தேவன் கார்த்தி, அருண்மொழி வர்மன் ஜெயம் ரவி ஆகியோர் ஒரே பிரேமில் தோன்றும் காட்சியுடன் இந்த வீடியோ அமைந்துள்ளது.
Listen News!