பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் PS-2 திரைப்படம் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரஹ்மான், அஸ்வின், ஷோபிதா துலிபாலா ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்நிலையில், நேரு உள்விளையாட்டரங்கத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற இசை & டிரெய்லர் வெளியீட்டு விழாவில் படக்குழுவினர், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் கமல்ஹாசன், ரேவதி உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பங்கேற்றனர்.
இந்த சூழ்நிலையில் பொன்னியின் செல்வன் - 2 படத்தின் இசைவெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட பார்த்திபன் சில விஷயங்களைப் பேசியிருந்தார். இருப்பினும் இந்த நிகழ்ச்சியில் பேசாத விடயங்களைபேசி வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழாவில் இநை்த நிகழ்ச்சியில் சில சொதப்பல்கள் நடந்திருச்சு.நான் பயங்கர டென்ஷன் ஆகிடுச்சு. நான் போய் தான் பெரிய பழுவேட்டையரை பேசக் கூப்பிடணும். என்னையும் கூப்பிட்டிருந்தாங்க ஆனால் நான் அங்க தான் இருந்தேன் எனக்கு அது விளங்கல பின்பு அவர் பேசிட்டு இருக்கும் போது பேச சொன்னாங்க எனக்கு என்ன பேசிறது என்றே தெரில.ரொம்ப கோபமாகிட்டேன். சில விஷயங்கள் பேசியிருந்தாலும் ஒரு ப்னோ மிஸ் ஆகிட்டு.
அத்தோடு பொன்னியின் செல்வன் 1 படம் பார்க்கல என்று சொல்லி இருந்தேன். அது ஏன் அப்பிடி சொன்னீங்க என்று கேட்டிருந்தாங்க, அது ஏன் என்றால் பொன்னியின் செல்வன் படம் பார்க்க தஞ்சாவூருக்கு சென்றேன்.ஆனல் ரசிகர்கள் அங்கே போட்டோ எடுத்திட்டு இருந்ததால் படத்தை சரியாக பார்க்க முடியல. பின்பு ஒரு நாள் பார்க்க போவோம் என்று நினைச்சேன். ஆனால் அதுக்குள்ள தியேட்டரில் இருந்து படத்தை எடுத்திட்டாங்க.
ஸ்கீரின்ல நான் பார்க்காத நிறைய நல்ல படங்கள் இருக்கு, எனக்கு ஓடிடில பார்க்கிறது எல்லாம் விருப்பமில்லை. இனிமேல் பொன்னியின் செல்வன் 2 படத்தை படத்துடன் சேர்த்து பொன்னியின் செல்வன் பாகம் 1 ஐயும் பார்க்க போறேன் என்றும் தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!