• Sep 20 2024

பொன்னியின் செல்வன் செகண்ட் சிங்கிள் ரிலீஸ்…. எங்கே?.. எப்போது? ..வெளியானது தகவல்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் மணிரத்தினத்தின் இயக்கத்தில் காவியமாக உருவாகி வரும் திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். இப்படமானது கல்கியின் நாவலை அடிப்படையாகக் கொண்டு இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது.

இந்த படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரஹ்மான், அஸ்வின் ஆகியோர் நடிக்கிறார்கள்.சமீபத்தில் படத்தின் போஸ்டர்கள், சிங்கிள் பாடல் & டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவங்கள் இணைந்து தயாரித்திருக்கும் இத் திரைப்படம் இரண்டு பாகங்களாக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது.

இதில் முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1” 2022, செப்டம்பர் 30 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.

இந்நிலையில் படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலை ஹைதராபாத்தில் வரும் ஆகஸ்ட் 18 ஆம் தேதி வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்காக படக்குழுவினர் ஐதராபாத் செல்லும் பணிகள் தொடங்கியுள்ளதாக தெரிகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement