பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணனுக்கு பாலியல் சீண்டல் நடந்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது.
தமிழ் இலத்தியத்தின் மணிமகுடமாக கருதப்படும் பொன்னியின் செல்வன் நாவல் திரைப்படமாக்கப்பட்டுள்ளது. இதன் முதல் பாகம் கடந்த வருடம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடந்தது. படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது.
படத்தின் அறிவிப்பு வெளியானதும் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மானோடு தொடர்ந்து பணியாற்றிய வைரமுத்து இந்தப் படத்தில் பணியாற்றாததுதான். மேலும் இதுகுறித்து பலரும் பேசினாலும் வைரமுத்து ஏன் பொன்னியின் செல்வன் படத்தில் இல்லை என்ற எந்த தெளிவான பதிலும் ரஹ்மானிடமோ, மணிரத்னத்திடம் இருந்தோ வரவில்லை. சூழல் இப்படி இருக்க படத்தில் பாடலாசிரியராக இளங்கோ கிருஷ்ணன் பணியாற்றுவார் என தெரிவிக்கப்பட்டது. இளங்கோ கிருஷ்ணன் தமிழ் இலக்கிய உலகில் பரிச்சயமான கவிஞர் ஆவார்.
பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் பொன்னி நதி பார்க்கணுமே, செங்குருதி சேயோனே உள்ளிட்ட பாடல்களை எழுதியிருந்தார். பாடல்கள் பரவலான வரவேற்பைப் பெற்றாலும் வைரமுத்து போல் எழுதவில்லை என்ற விமர்சனத்தையும் சிலர் முன்வைத்தனர். இருப்பினும் இளங்கோ கிருஷ்ணன் தமிழ் பாடல்களுக்கு ஒரு ஆரோக்கியமான அறிமுகமே என பெரும்பாலானோர் கூறினர். பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்திலும் இளங்கோ கிருஷ்ணன் பாடல்கள் எழுதியிருக்கிறார்.
இவ்வாறுஇருக்கையில் தமிழ் இலக்கியத்தில் பிரபல எழுத்தாளராக அறியப்படும் கோணங்கி மீது ஆண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்திருப்பது இலக்கிய உலகில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து பொன்னியின் செல்வன் பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணன் வெளியிட்டிருக்கும் முகநூல் பதிவில், 'தமிழ் இலக்கியச் சூழலில் கணிசமான ஒரு பால் ஈர்ப்பாளர்கள் உண்டு. என்னால் ஒரு பட்டியலே சொல்ல முடியும். இருபது வருடங்களுக்கு முன்பு என்னிடமும் ஒரு சீனியர் அத்துமீற முயன்றார். அத்தோடு நான் உதறிவிட்டு வந்துவிட்டேன்.
'கலை குறியின் வழியாக தீட்சை அளிக்கப்படுகிறது' என்ற நம்பிக்கை ஒரு ஃப்யூடல் கால மத நம்பிக்கை போல் தொனிக்கிறது. அத்தோடு வளர்ந்து வரும் இளம் தலைமுறையினரிடம் இப்படியான பொய் நம்பிக்கையை அளித்து, பாலியல் ரீதியாய் சுரண்டுவதும், உனக்கு செத்த பின்பு சொர்க்கம் கிடைக்கும் எனச் சொல்லி ஒரு மதவாதி சுரண்டுவதும் வேறு வேறு அல்ல.
கோணங்கி விவகாரம் எனக்கு அதிர்ச்சி எதுவும் அளிக்கவில்லை. அது முன்பே தெரியும் என்பதுதான் காரணம். ஆனால், அப்யூஸ் என்பது அதிர்ச்சியாகத்தான் உள்ளது. கோணங்கிக்கு எனது கண்டனங்கள்" என குறிப்பிட்டுள்ளார். அத்தோடு இந்தப் பதிவை பார்த்த இலக்கிய உலகம் சீரழிந்து கிடப்பதை பொன்னியின் செல்வன் பாடலாசிரியர் பதிவு அப்பட்டமாக உணர்த்தியிருப்பதாக கூறிவருகின்றனர்.
Listen News!