• Nov 14 2024

பொன்னியின் செல்வன் சக்சஸ் மீட்டில் குத்தாட்டம் போட்ட குந்தவை... வைரலாகும் வீடியோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவையே தன்னுடைய நடிப்பினால் கட்டிப்போட்டவர் என்றால் அது த்ரிஷா தான். இவர் ஜோடி சேராத முன்னணிக் ஹீரோக்களே இல்லை என்று கூறலாம். அந்தளவிற்கு தனக்கென ஒரு இடத்தினைப் பிடித்து வந்தார். 

இருப்பினும் சமீபகாலமாக பட வாய்ப்புக்கள் கிடைக்காமல் திணறி வந்த நடிகை த்ரிஷா, மணிரத்ரனத்தின் பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கம்பேக் கொடுத்தார். இப்படத்தில் அனைவரையும் கவர்ந்த குந்தவை என்ற கதாபாத்திரத்தில் திறம்பட நடித்து பல பாராட்டுக்களை பெற்றார்.


இதனைத் தொடர்ந்து இவருக்கு தற்போது கோலிவுட்டில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. அந்தவகையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள தளபதி 67 படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கின்றது. 

அதுமட்டுமல்லாது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரிக்க உள்ள ஏகே 62 படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கவும் இவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் பட வாய்ப்பை மீண்டும் தட்டித்தூக்கி வரும் த்ரிஷா, சமீபத்தில் வெளிநாட்டுக்கும் சுற்றுலா சென்றிருந்தார். 


அங்கிருந்து வந்ததும் த்ரிஷாவின் காலில் லேசான காயம் ஏற்பட்டது. இதனால் அவதிப்பட்டு வந்த இவர் பொன்னியின் செல்வன் படத்தின் சக்சஸ் பார்ட்டியில் கலந்துகொள்வாரா மாட்டாரா என்கிற கேள்வியும் பலரிடையேயே எழுந்து வந்தது.

ஆனால் த்ரிஷாவோ வலியையும் பொருட்படுத்தாமல் சக்சஸ் பார்ட்டியில் கலந்துகொண்டு அங்கு தன்னுடன் படத்தில் பணியாற்றியவர்களுடன் ஜாலியாக நடனமாடி மகிழ்ந்துள்ளார். அதுகுறித்த வீடியோ காட்சிகளும் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. 


Advertisement

Advertisement