• Sep 20 2024

யூடியூபில் சாதனை படைக்கும் பொன்னியின் செல்வன் டீசர்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பல ஆண்டு கனவான வரலாற்று சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான பொன்னியின் செல்வன் கதையை, தற்போது திரைப்படமாக உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் மணிரத்னம்.

இவர் வித்தியாசமான கதைகளை உலகிற்கு கொடுப்பதில் கை தேர்ந்தவர்.

இந்தப் படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யாராய் என பெரிய நடிகர் பட்டாளமே நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30 வெளியாக உள்ளது.

இப்படத்தின் போஸ்டர் ஒவ்வொன்றாக வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகம் ஈர்த்துள்ளது.

தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் பொன்னியின் செல்வர் பட டீஸர் நேற்று வெளியிடப்பட்டது.

இந்நிலையில் படத்தின் டீசர் அனைத்து மொழிகளிலும் வெளியாகி 15 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்திருக்கிறது. இத்திரைப்பட டீசரை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார்.

Advertisement

Advertisement