பொன்னியின் செல்வன் முதல் பாகமே வசூலை வாரிக் குவித்த நிலையில், அதன் இரண்டாம் பாகமும் அதே அளவுக்கு வசூல் வேட்டை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.வெளிநாடுகளில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தால் பாக்ஸ் ஆபிஸில் இன்னொரு இண்டஸ்ட்ரி ஹிட் உறுதி என்று பலரும் எதிர்பார்த்து இருந்தனர்.
'பொன்னியின் செல்வன்-2' ரிலீஸ் ஆகி 25 நாட்கள் ஆகும் நிலையில், அதன் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் வெளியாகி இருக்கின்றது. அந்தவகையில் 25 நாட்கள் ஆகியும் ரூ.350 கோடி வசூலை கூட நெருங்க முடியாமல் இந்த திரைப்படம் திணறி வருகிறது.
அதாவது இப்படம் இதுவரை தமிழ்நாட்டில் ரூ.115 கோடி மட்டுமே வசூல் செய்திருக்கின்றது. ஆனால் பொன்னியின் செல்வன் முதல் பாகம் தமிழ்நாட்டில் 205 கோடிக்கு மேல் வசூலித்திருந்தது. எனவே முதல் பாகத்துடன் ஒப்பிடுகையில் பொன்னியின் செல்வன் 2 சுமார் 90 கோடி குறைவாக வசூலித்து உள்ளமை தெரிய வருகிறது.
அதேபோன்று தென்னிந்தியாவை பொறுத்தவரை ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மூன்று மாநிலங்களையும் சேர்த்து பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் இதுவரை ரூ.53 கோடி வசூலித்து உள்ளதாம். இதில் கேரளாவில் மட்டும் அதிகபட்சமாக ரூ.22 கோடி வசூலை இப்படம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமல்லாது வட இந்தியாவில் இப்படம் மிகவும் குறைவான வசூலையே பெற்றுள்ளது.அந்தவகையில் இப்படம் ரூ.50 கோடி கூட வசூலிக்கவில்லை எனக் கூறப்படுகின்றது. மேலும் இப்படத்தை வெளிநாடுகளில் லைகா நிறுவனம் தான் வெளியிட்டது.
அந்தவகையில் இப்படம் இந்தியா தவிர்த்து இதர நாடுகளில் மொத்தமாக ரூ.125 கோடி வசூலை வாரிக் குவித்துள்ளது. இதில் அமெரிக்காவில் தான் அதிகளவிலான வசூல் கிடைத்துள்ளது. அதாவது அமெரிக்காவில் மட்டும் இப்படம் ரூ.43 கோடி வசூலித்து உள்ளதாம். ஆகவே தொகுத்துப் பார்க்கும் போது முதல் பாகத்தை விட 2-ஆம் பாகம் குறைவான வசூலை பெற்றுள்ளமை தெளிவாகின்றது.
Listen News!