ராஜ ராஜ சோழனை பற்றி கல்கியினால் புனையப்பட்ட நாவலான 'பொன்னியின் செல்வன்' கதையை தழுவி மணிரத்னம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள திரைப்படம் தான் 'பொன்னியின் செல்வன்'.
இப்படத்தின் முதல் பாகமானது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அத்தோடு இப்படம் வசூலிலும் 500 கோடிக்கு மேல் பெற்று சாதனை படைத்தது வருகின்றது.
இதனைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இதனால் படக்குழு ப்ரமோஷன் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அந்தவகையில் இதன் முதற்கட்டமாக இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. இது எங்கு எப்போது நடைபெறும் என்பதை படக்குழு விரைவில் அறிவிக்க உள்ளனர். இருப்பினும் ஏற்கனவே பொன்னியின் செல்வன 2வில் இருந்து வெளிவந்த 'அக நக' பாடல் நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றது.
இந்நிலையில், ரசிகர்களுக்கு தற்போது மற்றுமோர் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது பொன்னியின் செல்வன் 2 படத்தின் ட்ரைலர் தயாராகிவிட்டதாம். அந்தவகையில் 3.24 நிமிடங்கள் நீளம் கொண்ட இந்த ட்ரைலர் இசை வெளியீட்டு விழாவில் வெளியாகும் என தெரிவிக்கப் படுகின்றது.
எது எவ்வாறாயினும் ட்ரைலரின் நீளம் 3.24 நிமிடங்கள் என்பதால் ரசிகர்கள் 'சற்று பெருசாக உள்ளதே' என கூறி கவலைப்பட்டு வருகின்றனர். இருப்பினும் பொன்னியின் செல்வன் 1 படத்தின் ட்ரைலர் கூட அதே நீளம் தான். இதனையடுத்து ரசிகர்கள் தற்போது ட்ரைலரை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
Listen News!