தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். 'தளபதி' என சிறப்பாக அழைக்கப்படுகின்ற இவருக்கு தமிழகத்தில் மட்டுமன்றி உலகெங்கிலும் ஏராளமான ரசிகர் கூட்டம் உண்டு. இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து மிக பெரியளவில் வரவேற்பை பெற்று வெற்றியடைந்து வருகிறது.
அந்த வகையில் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் முதல் முறையாக தளபதி விஜய் நடித்து கடந்த ஏப்ரல் 13-ஆம் திகதி வெளிவந்த திரைப்படம் ‘பீஸ்ட்’. இருப்பினும் இத்திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெற்றுக் கொடுக்கவில்லை.
மேலும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘பீஸ்ட்’ திரைப்படம் ஆனது படுதோல்வியடைந்தது. வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு இருந்தாலும், கடும் விமர்சனத்திற்கு ஆளானது. இப்படம் தோல்வியடைந்திருந்தாலும் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றிருந்தது.
அதிலும் குறிப்பாக அரபிக் குத்து பாடல் youtubeல் பல கோடி மில்லியன் பார்வையாளர்களை குவித்து வருகிறது. இந்நிலையில் நடிகை பூஜா ஹெக்டே அரபிக் குத்து பாடலின் BTS - Behind The Scenes வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டியுள்ளார். இதனைப் பார்த்த தளபதி ரசிகர்கள் அவ்வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.
Have you ever met a brain doodler? 🫠🙋🏻♀️ #brb #restless #waitingforaction pic.twitter.com/Pj9AUCcvDE
Listen News!