• Sep 20 2024

பல தோல்வி படங்களால் இப்படியொரு முடிவை எடுத்த பூஜா ஹெக்டே! என்ன முடிவு தெரியுமா?

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் பூஜா ஹெக்டே. இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த பல படங்கள் தோல்வியில் முடிந்தது.

பீஸ்ட் வசூல் ரீதியாக ஓரளவு நல்ல வரவேற்பு இருந்தாலும் கூட விமர்சன ரீதியாக அப்படத்திற்கு வரவேற்பு கொஞ்சம் கூட இல்லை.

அதே போல் ராதே ஷ்யாம், ஆச்சாரியா, எலிஜபில் பேச்சிலர் மற்றும் சர்க்கஸ் ஆகிய படங்கள் அனைத்துமே தோல்வியிலேயே முடிந்தன.

இப்படங்கள் எல்லாம் நடிக்கும் பொழுது ரூ. 3 முதல் ரூ. 3.5 கோடி வரை சம்பளம் வாங்கி வந்துள்ள நடிகை பூஜா ஹெக்டே தற்போது திடீரென தனது சம்பளத்தை குறைத்துவிட்டாராம்.

தற்போது ஒரு கோடி ரூபாய் வரை நடிகை பூஜா ஹெக்டே தனது சம்பளத்தை குறைந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

பூஜா தனது சம்பளத்தை குறைக்க முந்தைய படங்களின் தோல்வி தான் காரணம் என்று தகவல் கசிந்துள்ளது.

Advertisement

Advertisement