• Sep 20 2024

அஜித்தின் ரீமேக் படத்தில் பீஸ்ட் பட கதாநாயகி பூஜா ஹெக்டே

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய திரையுலகின் சென்சேஷன் நடிகைகளில் ஒருவர் பூஜா ஹெக்டே. இவர் தமிழில் ஜுவா நடிப்பில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானவர்.

நடிக்க துவங்கிய காலகட்டத்தில் பெரிதும் வாய்ப்புகள் இல்லாமல் தடுமாறி வந்த இவர், தற்போது நடிகர்கள் விஜய், பிரபாஸ் என முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்து முடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வீரம். பிளாக் பஸ்டர் வெற்றியடைந்த இப்படத்தை ஹிந்தியில் சல்மான் கானை வைத்து ரீமேக் செய்து வருகின்றனர்.

கபி ஈத் கபி தீவாளி என பெயரிடப்பட்டுள்ள அப்படத்தில் தமன்னா கதாபாத்திரத்தில் நடிக்க பல நடிகைகளின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டுள்ளதாம்.

ஆனால் தற்போது அந்த கதாபாத்திரத்தில் நடிகை பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

https://www.youtube.com/embed/XNvSpgoJYqg

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement