தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக ஜொலித்து வருபவர் நடிகை பூனம் பஜ்வா. இவர் நடிகர் பரத்திற்கு ஜோடியாக நடித்து 2008-ஆம் ஆண்டு வெளியான 'சேவல்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இப்படத்தினை பிரபல இயக்குநர் ஹரி இயக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் இவர் பிராமண குடும்பத்தை சேர்ந்த ஒரு பெண்ணாக நடித்திருந்தார்.
தனது முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி இருந்தமையினால் தொடர்ந்து பட வாய்ப்புக்கள் இவருக்கு வந்து குவியத் தொடங்கின. அந்த வகையில் 'கச்சேரி ஆரம்பம், தெனாவட்டு, தம்பிக்கோட்டை, அரண்மனை 2, முத்தின கத்திரிக்கா' போன்ற தமிழ் படங்களில் நடித்திருந்தார்.
இவர் தமிழில் மட்டுமன்றி கன்னட மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார். தமிழில் அறிமுகப் படத்தில் மட்டுமல்லாது பல படங்களில் கிராமத்து பெண்ணாக நடித்திருந்த பூனம் பஜ்வா மலையாள திரையுலகிலும் சில படங்களில் நடித்தார்.
இவ்வாறாக பல மொழிகளிலும் தனது நடிப்பை வெளிப்படுத்தி வந்த பூனம் பஜ்வா நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழில் விஷால் நடித்த 'ஆம்பள' திரைப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்திருந்தார். அதனைத் தொடர்ந்து ஜெயம் ரவியுடன் 'ரோமியோ ஜூலியட்' என்ற படத்திலும் ஹன்சிகாவின் தோழியாக நடித்திருந்தார்.
எனினும் இவருக்கு எதிர்பார்த்த அளவிற்கு போதிய பட வாய்ப்புகள் இல்லாததால் ஜி.வி.பிரகாஷ் நடித்திருந்த 'குப்பத்து ராஜா' படத்தில் ஆன்ட்டி கேரக்டரில் நடித்தார். இவ்வாறாக எதோ ஏதோ ஒரு வகையில் சினிமாவில் தலை காட்டிக் கொண்டிருக்கும் நடிகை பூனம் பஜ்வா தற்போது உடல் எடையை குறைத்து இருக்கின்றார். அதுமட்டுமன்றி அடிக்கடி மார்டன் உடையில் போட்டோஷூட் நடத்தியும் வருகிறார்.
மற்ற நடிகைகளைப் போலவே எப்போதும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் பூனம் பஜ்வா அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருவது வழமை. அதேபோல் தற்போது அவர் கவர்ச்சி உடையணிந்து புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இக்கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
பிற செய்திகள்
- வெள்ளை சேலையில் தேவதை போல் நடந்து வரும் பிக்பாஸ் ஷிவானி…வைரலாகும் வீடியோ பதிவு..!
- ஆண் ஒருவரின் மார்பில் கத்தியால் குத்திய பெண்…சண்டையை விலக்கி வைத்த பிரபல நடிகர்…குவியும் பாராட்டுக்கள் ..!
- சிவகார்த்திகேயனின் மனைவி செய்த அந்த செயல்…இந்தக் காலத்திலேயும் இப்பிடி ஒரு பெண்ணா..!
- ஜீ தமிழில் மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கவுள்ள அச்சும்மா…மகிழ்ச்சியின் உச்சத்தில் ரசிகர்கள்..!
- யாருமே பார்த்திராத சிவாஜி கணேஷன் புகைப்படம்…பெண்ணா..?ஆணா..?
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!