போஜ்புரி, இந்தி, தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து பிரபலமானவர் ரவி கிஷன். மேலும் இவர் போஜ்புரி திரையுலகின் சூப்பர் ஸ்டாராகவும் அழைக்கப்படுகின்றார். அதுமட்டுமல்லாது டி. ராஜேந்தரின் மோனிஷா என் மோனலிசா படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
அத்தோடு மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் படத்திலும் நடித்திருக்கிறார். படங்ளில் மட்டுமல்லாது ஏராளமான தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்துள்ளார். மேலும் இவர் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.
இந்நிலையில் ரவி கிஷன் சமீபத்தில் அளித்த பேட்டியில் இரவு காபி குடிக்க வருமாறு அழைத்து பிரபல நடிகை ஒருவர் டார்ச்சர் செய்ததாக கூறிய செய்தியானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் சூப்பர் ஸ்டாரான பிறகு தனக்கு பெருமை ஏற்பட்டதாகவும் ரவி கிஷன் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில் "அனுராக் காஷ்யப்பின் 'கேங்க்ஸ் ஆப் வசேபூர்' படத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் எனது திமிர் காரணமாக அந்த வாய்ப்பை இழந்தேன்" எனக் கூறினார்.
அதாவது அந்த படத்தின் படப்பிடிப்பின் போது குளிப்பதற்கு பாலும், தூங்குவதற்கு ரோஜா மெத்தையும் கேட்டதாக சிரித்துக்கொண்டே ஒப்புக்கொண்டார். அந்தவகையில் பாலில் குளித்து, ரோஜா இதழ்களில் தூங்குவது வழக்கம். அந்த நேரத்தில் நான் என்னை ஒரு பெரிய நட்சத்திரமாக எண்ணிக்கொண்டேன்.
மேலும் பாலில் குளித்தால் மக்கள் இதைப் பற்றி பேசுவார்கள் என்று நினைத்தேன். தினமும் 25 லிட்டர் பால் தயார் செய்ய முடியாததால் அவர்கள் என்னை கேங்க்ஸ் ஆப் வசீபூரில் சேர்க்கவில்லை. இந்தக் கோரிக்கைகள் ஒன்றுமில்லாமல் திடீரென்று பணமும் புகழும் கிடைத்தால் மனம் தளர்ந்து போகிறது" என்றார்.
அத்தோடு "குறிப்பாக மும்பை போன்ற நகரம் யாரையும் பைத்தியம் பிடிக்க வைக்கும். அதை நான் ஒப்புக்கொள்கிறேன், நான் என் கட்டுப்பாட்டை இழந்தேன். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது மாறி, இயல்பு நிலைக்கு மீண்டும் வந்தேன்" எனவும் ஓப்பனாக கூறியுள்ளார் ரவி கிஷன்.
Listen News!