தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் கார்த்தி. இவர் 'பருத்திவீரன்' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர். இதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த இவரின் நடிப்பில் தற்போது 'பொன்னியின் செல்வன், விருமன், சர்தார்' ஆகிய படங்கள் தயாராகி வெளியாக காத்திருக்கின்றன.
இப்படங்களிலே முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள 'விருமன்' என்ற திரைப்படம் ஆனது ஆகஸ்ட் 31-ஆம் திகதி வெளியாக இருக்கின்றது. இதனைத் தொடர்ந்து செப்டம்பர் 30-ஆம் திகதி 'பொன்னியின் செல்வன்' என்ற படமும் வெளியாகிறது. மேற்குறித்த இரண்டு படங்களினையும் தொடர்ந்து வருகிற தீபாவளிக்கு 'சர்தார்' திரைப்படம் திரைக்கு வரவிருப்பதாகக் கூறப்படுகின்றது.
இவ்வாறாக கைவசம் நிறையப் படங்களினை வைத்துள்ள கார்த்தி அடுத்ததாக ராஜு முருகன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் வில்லனாக நடிக்க மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஒப்பந்தமாகியிருப்பதாக ஏற்கனவே ஒரு தகவல் வெளிவந்தது.
இந்தநிலையில் இப்படத்தில் இருந்து விஜய் சேதுபதி தற்போது விலகிவிட்டதாக ஒரு செய்தி வெளியாகி இருக்கின்றது. அதவாது கால்ஷீட் இல்லாத காரணத்தினால் இப்படத்தில் விஜய் சேதுபதியால் நடிக்க முடியாமல் போய்விட்டது என்று சினிமா வட்டாரங்களைச் சேர்ந்தவர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.
இதனைக் கேள்விப்பட்ட கார்த்தி ரசிகர்கள் அடடே அப்போ இந்தப் படத்தில் விஜய்சேதுபதி இல்லையா என்ற ஏமாற்றத்திலும், இனி வில்லனாக யார் வருவாரோ என்ற எதிர்பார்ப்பிலும் உள்ளனர்.
பிற செய்திகள்
- சாதனை படைக்கும்; விஜய் படத்தின் புதிய பாடல்
- யோகி பாபுவின் ‘பன்னிக்குட்டி’ படத்தின் புதிய அப்டேட்டுகள்….திரும்பத் திரும்ப பார்க்கணும் போல இருக்கே
- ‘வாரிசு’ படத்தை மொத்தமாக வாங்கிய நிறுவனம்; அடடே அது இவங்க தானா?
- இளவரசி லைவ் லொகேஷன் அனுப்புங்க; திரிஷாவை கிண்டலடித்த கார்த்தி
- குடும்பத்துடன் விடுமுறையை கொண்டாடும் நம்ம தல; வைரலாகும் புகைப்படங்கள்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!