• Nov 14 2024

பிரபல நடிகர் நிவின் பாலியா இது..? இந்தளவிற்கு உடல் எடையைக் குறைத்து விட்டாரே... லேட்டஸ் கிளிக்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

மலையாள சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகர் நிவின் பாலி. அந்தளவிற்கு இவர் அதிகளவில் மலையாளப் படங்களில் தான் நடித்துள்ளார். இருப்பினும் தமிழ் சினிமா ரசிகர்களை 'பிரேமம்' என்ற படம் மூலம் அதிகம் கவர்ந்தவர். 

இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்கள் மூலமும் மக்களின் ஆசை நாயகனாக வலம் வந்தார். அந்தவகையில் 'நேரம், பெங்களூர் டேய்ஸ்' என அடுத்தடுத்து இளைஞர்களை கவரும் படங்களாக நடித்து வந்தார். 


பின்பு ஒரு கட்டத்தில் அவர் நடிக்கும் எல்லா மலையாள படங்களையும் தமிழ் சினிமா ரசிகர்கள் வரவேற்கத் தொடங்கினர். மேலும் 3 படங்கள் இந்த வருடம் அவரது நடிப்பில் மலையாளத்தில் வெளியாக இருக்கிறது.

இவ்வாறு பல படங்களிலும் நடித்து வந்த நடிகர் நிவின் பாலி கொரோனா காலகட்டத்தில் உடல் எடை போட்டு ஆள் அடையாளமே தெரியாமல் மாறியிருந்தார். இதன் காரணமாக பிரேமம் படத்தில் பிட்டாக இருந்த நிவின் பாலியா இது இப்படி குண்டாகிவிட்டாரே என ரசிகர்கள் கிண்டலாக கமெண்ட் செய்து வந்தனர்.


இந்நிலையில் தற்போது நிவின் பாலி 25 கிலோ வரை உடல் எடையை குறைத்து ஆளே மாறியிருக்கிறார். இது குறித்த புகைப்படமானது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. 


Advertisement

Advertisement