• Sep 21 2024

சூரரைப்போற்று சூர்யாவின் அப்பா திடீர் மரணம்: வெளியான அதிர்ச்சிக் காரணம்!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருந்தாலும் தமக்கென்று ஓர் இடத்தைப் பிடித்த முன்னணி நடிகர்கள் பலர் இருக்கின்றனர். இவர்களில் மிகவும் முக்கியமானவர் தான் பூ ராமு.

வயதானாலும் தன்னுடைய இயல்பான நடிப்பினால் ரசிகர்களைக் கவர்ந்த இவர் நீர்ப்பறவை, சூரரைப் போற்று, பரியேறும்பெருமாள் ,கர்ணன் ஆகிய திரைப்படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கின்றார்.

அதிலும் சூரரைப் போற்று திரைப்படத்தில் சூர்யாவின் அப்பாவாக தனது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருப்பார்.

இந்த நிலையில் இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் சென்னை ராஜுவ் காந்தி அரசமருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.இதை அறிந்த திரையுலகினர் பலரும் தமது இரங்கல்களை தெரிவித்து வருகின்றார்கள்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement