பிரபல தெலுங்கு நடிகரும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பருமான மோகன் பாபுவின் இளைய மகன் நடிகர் மனோஜ் மஞ்சுவும் ஆந்திர மாநிலத்தின் பிரபல அரசியல்வாதியான பூமா நாகிரெட்டியின் மகள் பூமா மௌனிகாவும் காதலித்து வந்த நிலையில் தற்போது திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் இவர்களின் திருமணமானது மார்ச் மாதம் 3-ஆம் தேதி நடக்கவிருக்கிறது. அத்தோடு மார்ச் 1-ஆம் தேதி வீட்டில் சங்கீத் மற்றும் மெஹந்தி நிகழ்ச்சிகள் நடக்கிறது. இந்நிலையில் தன் வருங்கால மனைவி பற்றி மனோஜ் மஞ்சு பல விடயங்களை பகிர்ந்திருக்கின்றார்.
அவர் கூறுகையில் "எனக்கு மௌனிகாவை பல ஆண்டுகளாக தெரியும். நாங்கள் நல்ல நண்பர்கள். என் வாழ்க்கையின் இன்ப, துன்பங்களை பார்த்திருக்கிறார். எங்களுக்கு இடையேயான நட்பு பின்னர் காதலாக மாறியது. அவர் எனக்கு மனைவியாக கிடைக்க நான் ரொம்பவே கொடுத்து வைத்திருக்க வேண்டும்" என்றார்.
மேலும் திருமணம் பற்றி மோகன் பாபுவின் குடும்ப செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில் "திருமணத்தில் இரு வீட்டார் மட்டுமே கலந்து கொள்வார்கள். திருமணத்தை பிரமாண்டமாக நடத்த மனோஜும், மௌனிகாவும் விரும்பவில்லை. புது அத்தியாயத்தை தொடங்க அவர்கள் இருவரும், குடும்பத்தாரோடு இணைந்து ஆவலாக இருக்கிறார்கள். பெப்ரவரி 23-ஆம் தேதியில் இருந்து திருமண கொண்டாட்டங்கள் நடந்து வருகிறது" என்றார்.
இந்தத் திருமணமானது மனோஜ் மஞ்சுவுக்கு இரண்டாவது திருமணமாகும். இவர் முன்னதாக பிரணதி ரெட்டியை கடந்த 2015-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இருப்பினும் அவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டு 2019-ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள்.
இதனைத் தொடர்ந்து சிங்கிளாக இருந்து வந்த மனோஜ் தற்போது மௌனிகாவை திருமணம் செய்து கொள்ளவிருக்கிறார். இந்த திருமணம் நீண்ட காலத்திற்கு நிலைத்து நிற்க வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
மேலும் இது மனோஜுக்கு மட்டும் அல்ல பூமா மௌனிகாவுக்கும் இரண்டாவது திருமணம் தான். அதாவது முன்னதாக மௌனிகாவுக்கும், பெங்களூரை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவருக்கும் திருமணம் நடந்தது. அந்த தம்பதிக்கு தற்போது ஒரு மகன் இருக்கிறார்.
இந்நிலையில் மனோஜ், மௌனிகாவின் திருமணத்தில் ரஜினிகாந்த் கலந்து கொள்வாரா என பலரிடையேயும் கேள்வி எழுந்துள்ளது. நெருங்கிய நண்பன் வீட்டில் நடக்கும் விசேஷம் என்பதால் ரஜினி நிச்சயம் வந்து மணமக்களை ஆசிர்வாதம் செய்வார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
Listen News!