• Sep 20 2024

பிரபல காமெடி நடிகர் திடீர் மரணம்..! சோகத்தில் மூழ்கியுள்ள திரையுலகம்..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிரபல காமெடி நடிகர் ஹரிஷ் பென்கன் காலமானார்.

அவர் கல்லீரல் தொடர்பான நோயால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இவர் மகேஷிண்டே பிரதிகாரம் , ஜன.இ.மன் மற்றும் மின்னல் முரளி போன்ற படங்களில் நடித்தவர்.

இவருக்கு சில வாரங்களுக்கு முன் வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கல்லீரல் நோய் இருப்பது கண்டறியப்பட்டது, அவருக்கு மாற்று அறுவை சிகிச்சை தேவைப்பட்டது, அதற்காக அவரது இரட்டை சகோதரி ஸ்ரீஜா தானம் செய்ய தயாராக இருந்தார். 

அப்போது அவரது சிகிச்சை மற்றும் அதற்குத் தேவையான பணம் குறித்த செய்திகளை அவரது திரையுலக நண்பர்கள் பகிர்ந்து கொண்டனர்.இந்நிலையில் சிகிச்சை பலனின்றி  அவர் காலமானார். அவருக்கு வயது 48.இவரது மறைவிற்கு திரைப்பட பிரபலங்கள் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்  


Advertisement

Advertisement