• Nov 15 2024

கோடிக்கணக்கில் பணத்தைக் கொடுத்து... 'தளபதி-68' படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் லியோ. இப்படத்தின் படப்பிடிப்பானது அண்மையில் தான் முடிவடைந்து தற்பொழுது போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகின்றது.இப்படம் அக்டோபர் மாதம் ரிலீஸாகவுள்ளது. இதனைத் தொடர்ந்து விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.


மேலும் விஜய் இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும், அமெரிக்காவில் இதற்கான வேலைகள் மும்முரமாக இடம்பெற்று வருவதாகவும் கூறப்படுகின்றது. அத்தோடு சமீபத்தில் தான் விஜய் அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பியிருந்தார். 

இப்படத்தினை கல்பாத்தி எஸ். அகோரமின் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தற்காலிகமாக 'தளபதி 68' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் 2024 -ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது.


இந்நிலையில் தற்போது இப்படம் குறித்து மற்றுமோர் தகவல் வெளியாகி இருக்கின்றது. அதாவது தளபதி 68 படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரூ.100 கோடிக்கு மேல் கொடுத்து கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகின்றது.  இவ்வாறாக லியோ படம் வெளியாவதற்கு முன்பாகவே 'தளபதி-68' படம் பல கோடிகளை ஈட்டி வருகின்றமை ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.

Advertisement

Advertisement