• Sep 20 2024

பிக்பாஸ் சீசன் 7 இல் வைல்ட்காட் என்ட்ரியாக நுழையும் பிரபல கானா பாடகர்- அடடே இனி செம என்டர்ரெயின்மென்ட் தான்

stella / 11 months ago

Advertisement

Listen News!


விஜய்டிவியின்  பிக்பாஸ்  சீசன் 7 நிகழ்ச்சி  ஒளிபரப்பாகி வருகின்றது.இந்த நிகழ்ச்சியை முன்னணி நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பிராந்திய மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

இதில் கலந்து கொண்ட பிரபலங்களுக்கு பிரபலத்தோடு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பும் கிடைப்பதால், சினிமாவில் நடிக்க விரும்பும் நடிகர்கள் இந்த நிகழ்ச்சியில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.


மேலும் இந்த நிகழ்ச்சில் முதல் வாரத்தில் அனன்யா எலிமினேட் ஆன நிலையில், பாவா செல்லத்துரை அதன் பின் நெஞ்சுவலி என்று கூறி நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.அதனால் இரண்டாம் வாரம் எலிமினேஷன் இல்லை என அறிவிக்கப்பட்டது.


இதனை தொடர்ந்து இந்த வாரம் யார் வெளியே போகப்போவது என எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. அது மட்டுமின்றி வைல்டு கார்டு என்ட்ரியும் விரைவில் வர இருக்கிறதாம்.பிரபல கானா பாடகர் கானா பாலா தான் வைல்டு கார்டு எண்ட்ரியாக பிக் பாஸ் செல்கிறாராம். இதனால் நிகழ்ச்சி என்டர்ரெயின்மென்டாக இருக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement