தமிழ் சினிமாவில் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான மூன்று என்னும் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியவர் தான் அனிரூத். இவர் இதனைத் தொடர்ந்து கத்தி திரைப்படத்தில் இசையமைத்ததன் மூலம் முன்னணி இசையமைப்பாளராக மாறினார்.
அதனைத் தொடர்ந்து எதிர் நீச்சல், வேலையில்லா பட்டதாரி,பேட்ட, பீஸ்ட் என்னும் படங்களுக்கு இசையமைத்திருந்தார்.இது தவிர அண்மையில் வெளியாகிருந்த விக்ரம் திரைப்படத்திலும் இசையமைத்திருந்தார்.
தற்பொழுது ஏகே 61, இந்தியன் 2, ஜெயிலர் ஆகிய படங்களில் இசையமைக்க கமிட்டாகியுள்ளார். இவருடைய திரை வாழ்க்கையில் முக்கியமான படங்களில் ஒன்று தான் மாஸ்டர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான இப்படத்தில் தளபதி விஜய் ஹீரோவாக நடித்திருந்தார். அனிரூத் இப்படத்திற்கு இசையமைத்திருந்ததோடு இப்படத்தின் பாடல்கள் யாவும் வெறித்தனமாக சூப்பர் ஹிட் வெற்றியும் பெற்றிருந்தது.
இந்நிலையில், இப்படத்திற்கு இசையமைக்க ரூ. 3.5 கோடி சம்பளமாக வாங்கியுள்ளாராம் என புதிய தகவல் வெளியாகியுள்ளது. அத்தோடு தற்பொழுது இசையமைக்கும் படங்களுக்கு அதிகளவான சம்பளம் வாங்கி வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- சீதா ராமம்’ சக்சஸ் மீட்டில் இளவரசி போல கலந்து கொண்ட மிருணாள் தாகூர்- ஐந்து நாட்களுக்குள் இத்தனை கோடி வசூலா?
- போதைப் பொருளை வைச்சு மட்டும் படம் எடுக்கிறீங்க பாதிக்கப்பட்டிருக்கின்றீர்களா?-லோகேஷிடம் குத்தலாக கேள்வி கேட்ட ரசிகர்
- தி லெஜண்ட் பட ஹீரோயினை வச்சு செய்யும் பிரபல கிரிக்கெட் வீரர்-எல்லாம் அந்த விஷயம் தான் காரணமாம்
- கறுப்பு நிற உடையில் தொகுப்பாளினி டிடி வெளியிட்ட லேட்டஸ்ட் கிளிக்ஸ்- வாவ் செம சூப்பராக இருக்கின்றாரே
- நடிகை ஹன்சிகாவின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்- யாரெல்லாம் போயிருக்கிறாங்க என்று பாருங்க
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!