• Sep 21 2024

யூடியூப்பிரபலம் ttf வாசனின் பைக்கில் பயணித்த போது அலறிய பிரபல சீரியல் நடிகை

stella / 1 year ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பான 'தங்கம்' என்ற சீரியலில் மூலம் குழந்தை நட்சத்திரமாக சின்னத்திரையில் அறிமுகமானவர் ரவீணா.இதனைத் தொடர்ந்து பூவே பூச்சூடவான எனப் பல சீரியல்களில் நடித்து வந்தார்.

சின்னத்திரையைத் தாண்டி விஜய்யின் ஜில்லா படத்திலும்  விஷ்னு விஷால் நடிப்பில் 2018 -ம் ஆண்டு வெளியான "ராட்சசன்" படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதையடுத்து ரவீணா, மௌன ராகம் 2-ம் சீசன் சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.


தற்போது விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் "குக் வித் கோமாளி" நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்துகொண்டுள்ளார்.சமீபத்தில் பைக்கை வேகமாக ஓட்டி பல சர்ச்சைகளில் மாட்டிக்கொள்ளும் TTF வாசனுடம் பைக் ரைடு சென்றுள்ளார் ரவீணா.


அப்போது ttf வாசன் அதிவேகத்தில் சென்றபோது ரவீணா பின் இருக்கையில் இருந்து அலறியுள்ளார்.மேலும்  ttf வாசன் அடிக்கடி பைக்கை வேகமாக ஓட்டி சர்ச்சைகளில் சிக்கி வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
















Advertisement

Advertisement