• Sep 20 2024

குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சியில் பிரபல சீரியலின் கதாநாயகி- அட இவரா...?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் மிகப்பெரிய ஹிட் ஆன குக் வித் கோமாளி ஷோவில் அடுத்த சீசனுக்காக தான் ரசிகர்கள் எல்லோரும் தீவிரமாக காத்திருந்தனர். 

முதல் சீசன் அமோக வெற்றி, அடுத்தடுத்து 2, 3 சீசன்களும் செம ஹிட்டாக ஒளிபரப்பானது.வழக்கத்தை விட அடுத்த சீசன் தற்போது தாமதமாகவே ஆரம்பமாகப்போகின்றது.

அண்மையில் 4வது சீசனிற்கான புரொமோ வெளியானது, அதில் கோமாளிகள் யார் யார் என்ற விவரம் மட்டுமே இருந்தது.

விஜய் தொலைக்காட்சியில் செம ஹிட்டாக ஒளிபரப்பாகும் தொடர்கள் பல உள்ளன. சின்னத்திரை நாயகிகள் என்று எடுத்தால் அதில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நடிகைகள் தான் பெரும்பாலும் அதிகம் வருவார்கள்.

மேலும் அப்படி ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு நாயகி தான் மௌன ராகம் 2 தொடர் ரவீனா. சின்ன பெண் என்றாலும் நடிப்பில் அசத்தி வருகிறார். சந்தோஷம், துக்கம், கோபம் என எந்த சீன் வந்தாலும் அதில் அசால்ட்டாக நடித்து அசத்தி விடுகிறார்.

எனினும் தற்போது மௌன ராகம் சீரியலில் கதைக்களம் மிகவும் விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது.அத்தோடு நடிகை ரவீனா சீரியலை தாண்டி குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்க இருப்பதாக செய்திகள் வந்துள்ளன.



Advertisement

Advertisement