பிரபல கஜல் இசைப் பாடகி நய்யரா நூர் காலமானார். அவருக்கு தற்போத வயது 71. இந்தியாவில், அசாம் மாநிலத்தில் பிறந்தவர் பாடகி நூர். பாகிஸ்தான் மக்களால் அன்புடன் புல் புல் என்று அழைக்கப்பட்டு வந்தார். பழம் பெரும் பாடகி நய்யரா நூர் உடல் நல குறைவால் காலமானதை, அவரது மருமகன் ராணா ஜைடி, ட்விட்டரில் தெரிவித்து உள்ளார்.
மேலும் அந்த பதிவில், எனது அன்பு அத்தனை நய்யரா நூர் மறைவு செய்தியை கனத்த மனதுடன் அறிவிக்கிறேன். அத்தோடு அவரது ஆன்மா சாந்தியடையட்டும். அவரது மென்மையான குரலுக்காக, பாகிஸ்தானின் புல்புல் என்ற பட்டம் அவருக்கு வழங்கப்பட்டது என கூறியுள்ளார்.
பாடகி நய்யரா நூரின் மறைவு செய்தி அறிந்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப், பாடகி நூரின் மறைவு இசை உலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில், நூர் பாடிய கஜல் பாடல்களாகட்டும் அல்லது எந்தவொரு பாடல் ஆகட்டும். அவர் மிக சரியாகவே அதனை பாடுவார். அவரது மறைவால் ஏற்பட்ட வெற்றிடம் ஒருபோதும் நிரப்பப்படாது என குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு 1950ம் ஆண்டு இந்தியாவின் அசாம் மாநிலத்தில் பிறந்த பாடகி நய்யரா நூர், பின்னர், 1950ம் ஆண்டின் பிற்பகுதியில் தனது குடும்பத்துடன் பாகிஸ்தானுக்கு புலம் பெயர்ந்து சென்று விட்டார். மெல்லிசையில் தீவிர ஆர்வம் கொண்ட பாடகி நூர், எந்த விதமான இசைப் பின்னணியும் இல்லாத குடும்பத்தில் இருந்து வந்தாலும், இசை மீதுள்ள ஆர்வத்தினால், இளம் வயதிலேயே இசையை கற்க தொடங்கினார். 1968ம் ஆண்டு ரேடியோ பாகிஸ்தானில் முதன் முறையாக பாட ஆரம்பித்தார்.
அவருக்கு கணவர் ஷெஹாரியார் ஜைடி, அலி மற்றும் ஜாபர் என இரண்டு மகன்கள் உள்ளனர். கஜல் இசைப் பாடல்கள் மூலமாக ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற பாடகி நூர், பாகிஸ்தான் மக்களால் பாகிஸ்தானின் புல்புல் என்று செல்லமாக அழைக்கப்பட்டார். பாகிஸ்தானின் நைட்டிங்கேல் என்கிற பட்டமும் பாடகி நூருக்கு உண்டு.
Listen News!