மராட்டிய திரையுலகில் புகழ்பெற்ற பாடகிகளில் ஒருவராக விளங்கியவர் சுலோச்சனா சவான் காலமானார். பிரபல மராத்தி பாடகியான இவர் தனது ஆத்மார்த்தமான லவானி நாட்டுப்புற பாடல்களுக்காக ரசிகர்களால் பெரிதும் அறியப்பட்டவர். மேலும் அவர் தனது வாழ்நாள் முழுவதும் மராத்தி நாட்டுப்புற இசைக்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்டார்.
அதுமட்டுமல்லாது மங்கேஷ்கர் சகோதரிகளுடன் இணைந்து மராத்தி வரலாற்றில் சிறந்த பெண் பின்னணி பாடகிகளில் ஒருவராக திகழ்ந்தார். மேலும் இவருக்கு கடந்த மார்ச் மாதம் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் 92 வயதான சுலோச்சனா சவான் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். இதனைத் தொடர்ந்து மும்பையின் குர்கானில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று முந்தினம் காலமானார்.
இவரின் மறைவை சுலோச்சனா சவானின் மகன் விஜய் சவான் உறுதிப்படுத்தி உள்ளார். இவ்வாறாக வயது மூப்பு காரணமாக உயிரிழந்த பாடகி சுலோச்சனா சவானின் மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும், திரையுலக பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு மராட்டிய திரையுலகில் புகழ்பெற்ற பாடகியாக திகழ்ந்து வந்த சுலோச்சனா சவானின் மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Listen News!