• Nov 17 2024

பிரபல தமிழ் நடிகர் திடீர் மரணம்..! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல தயாரிப்பாளர் எம்.ஆர்.சந்தானத்தின் மகனும் இயக்குநர் சந்தான பாரதியின் சகோதரருமான ஆர்.எஸ்.சிவாஜி. தன்னுடைய 66 வயதில் இன்று காலை 7 மணியளவில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இவர் பல தமிழ் படங்களில் குணச்சித்திர நடிகராகவும், சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர். 


ஆர். எஸ்.சிவாஜி கடந்த 1981 ஆம் ஆண்டு தன்னுடைய சகோதரர் சந்தான பாரதி இயக்கத்தில் வெளியான 'பன்னீர் புஷ்பங்கள்' திரைப்படத்தின் மூலம், குணச்சித்திர நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களில் மிகவும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர். 


இவர் மது மலர், மீண்டும் ஒரு காதல் கதை, விக்ரம், அபூர்வ சகோதரர்கள், குணா, வியட்நாம் காலனி, பவித்ரா, வில்லன், அன்பே சிவம், உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

நடிகராக மட்டும் இன்றி,  துணை இயக்குநர், சவுண்ட் டிசைனர், லைன் ப்ரொடியூசர், என பன்முக திறமையோடு விளங்கியவர் ஆர்.எஸ்.சிவாஜி. (1.9. 2023) நேற்று மாலை சென்னை தேவி கருமாரி தியேட்டரில் நடந்த உலக சினிமா விழா துவக்க விழாவில் நடிகர் ராஜேஷ், நடிகை ஷீலா ராஜ்குமார், இயக்குநர் ராசி அழகப்பன் உள்ளிட்டோருடன் நடிகர் ஆர்.எஸ்.சிவாஜியும் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. 


நல்ல ஆரோக்கியத்துடன் இருந்த இவர் திடீர் என இன்று உயிரிழந்துள்ளது அனைத்து திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பலரும் தங்களின் இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள்.


Advertisement

Advertisement