• Sep 20 2024

பிரபல வில்லன் நடிகரை ரூ. 45 லட்சம் செலவு செய்து உயிரை காப்பாற்றிய சிரஞ்சீவி: அப்பிடி என்ன தான் நடந்துச்சு..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

கலியும் எனும் திரைப்படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் பொன்னம்பலம். தமிழ் திரையுலகில் பிரபலமான வில்லன் நடிகரான இவர் முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்துள்ளார். அண்மையில் இவருக்கு வெற்றிகரமாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடந்து முடிந்தது.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சரத்குமார், அர்ஜுன் உள்ளிட்ட பல பிரபல நடிகர்களுக்கு வில்லனாக நடித்துள்ளார் பொன்னம்பலம். அத்தோடு தமிழ் சினிமா மட்டுமில்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்துள்ளார்.


இவ்வாறுஇருக்கையில்  கடந்த சில மாதங்களுக்கு முன்பாக உடல்நலக்குறைவு காரணமாக பாதிக்கப்பட்டார் பொன்னம்பலம். அந்த சமயத்தில் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கிய இவருக்கு திரையுலகை சார்ந்த பலரும் பண உதவி செய்தனர். சிறுநீரக கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் பொன்னம்பலம்.

அந்த சமயத்தில் பொன்னம்பலத்திற்கு கமல், தனுஷ், சரத்குமார், விஜய் சேதுபதி, அர்ஜுன், கே.எஸ். ரவிக்குமார், ராகவா லாரன்ஸ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் பொன்னம்பலத்தின் மருத்துவ செலவிற்கு உதவி செய்தனர். இந்நிலையில் தற்போது உடல்நலம் தேறியுள்ள பொன்னம்பலம் அளித்துள்ள பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.


அத்தோடு அதில் சிரஞ்சீவி குறித்து உருக்கமாக பேசியுள்ளார். உடல்நிலை குறித்து பேசி ஏதாவது உதவி செய்ய முடியுமா என சிரஞ்சீவியிடம் கேட்டுள்ளார் பொன்னம்பலம். உடனே ஐதாரபாத் வர முடியுமா என அவர் கேட்டுள்ளார். ஆனால் குடும்பம் இங்கே இருப்பதால், அவர்கள் தனக்கு உதவியாக இருப்பதாக தெரிவித்துள்ளார் பொன்னம்பலம். எனினும் அதற்கு அவரும் எதுவும் கவலைப்பட வேண்டாம். உடனே அப்போலா போங்க. நான் எல்லாத்தையும் பார்த்துக்கிறேன் என தெரிவித்துள்ளார்.


அதன்படி அங்கு சென்று டயாலிசிஸ் செய்ய உதவி செய்வார் என நினைத்தால் 45 லட்சம் வரை செலவு செய்து என்னை காப்பாற்றினார் சிரஞ்சீவி. அப்போலோவில் என்ட்ரி பீஸ் கூட வாங்கவில்லை. அத்தோடு அங்கிருந்த அவரின் மனைவியும் என்னை நன்றாக பார்த்துக்கொண்டார். நான் வணங்கும் கடவுளின் பெயரை வைத்துள்ள சிரஞ்சீவி சார் செய்த உதவியை எப்போதும் மறக்க மாட்டேன். அவருதான் ரியல் மெஹா சூப்பர் ஸ்டார் என உருக்கமாக கூறியுள்ளார் பொன்னம்பலம். அவரின் இந்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement