பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படம் இந்தியன். இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் ஷுட்டிங் பணிகள் கடந்த 2019ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகின்றது.
மேலும் இடையில் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து கொரோனாப் பரவல் காரணமாக படப்பிடிப்பு சில காலம் நிறுத்தப்பட்டு தற்பொழுது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க மறைந்த நடிகர் விவேக் கமிட்டாகியிருந்தார்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக படப்பிடிப்பு மீண்டும் தொடங்கும் முன்னரே நடிகர் விவேக் காலமானார்.தற்போது நிறுத்திவைக்கப்பட்டிருந்த இந்தியன் 2 படப்பிடிப்பை ரெட் ஜெயண்ட் மூவிஸ் லைகாவுடன் இணைந்து தயாரித்து முடிக்க திட்டமிட்டுள்ளது.
அதன்படி இன்று பூஜை செய்யப்பட்டு படப்பிடிப்பு பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளது. ஆனால் விவேக் மறைந்துவிட்ட நிலையில் விவேக்கின் ஆசை கனவாகவே முடிந்துவிட்டது.அவருக்கு பதிலாக யார் அந்த கதாப்பாத்திரத்தை நடிப்பார் என்ற கேள்வி இருந்து வந்தது.
இந்நிலையில் நடிகர் குரு சோமசுந்தரம் விவேக்கிற்கு பதிலாக அந்த ரோலில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆரண்ய காண்டம், ஜோக்கர் படங்களில் காமெடி செய்த குரு சோமசுந்தரம் மலையாள படமான மின்னல் முரளி உள்ளிட்ட சமீபத்திய சில படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார். விவேக்கிற்கு இணையாக குரு சோமசுந்தரம் காமெடி காட்சிகளை பூர்த்தி செய்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Listen News!