இப்போது எதிர்நீச்சலின் திரைக்கதை மற்றும் இயக்கம் ஆகியவற்றை திருச்செல்வம் கையாண்டு வருகிறார். தொடரின் காட்சிகளை ரசிகர்களிடம் அழகாக காட்டி உள்ளார் ஒளிப்பதிவாளர் சந்தானம். பெரும்பாலான காட்சிகள் ஒரே வீட்டில் தான் என்றாலும் ரசிகர்களுக்கு அலுப்பு வராமல் அதைக் கொண்டு சேர்த்துள்ளார்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் ஆனது இன்றுவரை ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. அத்தோடு சீரியல் வரலாற்றிலேயே இப்படி ஒரு தொடருக்கு இவ்வளவு வரவேற்பு எப்போதுமே கிடைத்ததில்லை.
அந்தவகையில் எதிர்நீச்சல் சீரியலினை பிரம்மாண்டமான தொடர் என்றெல்லாம் சொல்ல முடியாது. சாதாரணமாக நம் வீட்டில் அம்மா, மனைவி போன்றோர் எப்படி இருக்கிறார்களோ அதை அப்படியே இதில் பிரதிபலிக்கின்றனர். அதாவது ஆண்களுக்காக பெண்கள் எவ்வளவு சகித்துக் கொள்கிறார்கள் என்பதை இத்தொடர் அழகாக காட்டுகிறது.
எதிர்நீச்சல் சீரியலின் வெற்றிக்கு நடிகர், நடிகைகள் பலர் பக்கபலமாக இருந்தாலும் முதுகெலும்பாக மேலும் சிலர் இருக்கிறார்கள். அந்த வகையில் இயக்குநர் திருச்செல்வம் இத்தொடரை மிகவும் அருமையாக இயக்கி வருகிறார். மேலும் இவர் மெட்டிஒலி தொடரில் திருமுருகனுக்கு உதவி இயக்குநராக பணியாற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாது தேவயானியை வைத்து இவர் இயக்கிய கோலங்கள் தொடர் மாபெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் தற்போது இயக்குநர் திருச்செல்வம் அவர்கள் எதிர்நீச்சல் சீரியலில் ஜீவானந்தம் என்ற கேரக்டரில் புதிதாக களமிறங்கி இருக்கின்றார். இதற்கு ரசிகர்கள் பலரும் தங்களுடைய ஆதரவினை தெரிவித்து வருவதோடு, அவரை சீரியலில் பார்ப்பதால் மிகுந்த சந்தோஷத்திலும் உள்ளனர்.
Listen News!