• Sep 20 2024

பிரபாஸிற்கு ஜோடியாகும் முன்னணி பாலிவுட் ஹீரோயின்-அட இவரா..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தெலுங்கு திரைப்படத் துறையின் முன்னணி நடிகர்களுள் ஒருவர் பிரபாஸ் ஆவார் .இவர் 2004 ஆம் ஆண்டு வெளியான வர்ஷம் திரைப்படத்தின் மூலம் புகழ்பெற்றார் .மேலும் இவர் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார் என்பதும் தெரிந்ததே.

இவர் தெலுங்கில் நடித்த மிர்ச்சி, முன்னா, டார்லிங், மிஸ்டர். பெர் பெக்ட் உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

மேலும் இவர் தமிழில் நடித்த பாகுபலி, மற்றும் பாகுபலி 2 போன்ற படமானது இவருக்கு மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ளது.இந்நிலையில் இவர் நடிப்பில் சமீபத்தில் ராதே ஷ்யாம் எனும் திரைப்படம் பாண் இந்தியா படமாக வெளிவந்திருந்தது.

அதனை தொடர்ந்து அடுத்து அவர் ஆதிபுருஷ், சலார் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.மேலும் ஆதிபுருஷ் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. சலார் படத்தை கேஜிஎப் இயக்குனர் இயக்குகிறார் என்பதால் எதிர்பார்ப்பு பல மடங்கு இருக்கிறது.

மேலும் அதுமட்டுமின்றி மகாநடி பட இயக்குநர் நாக் அஷ்வின் உடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார் பிரபாஸ். அந்த படம் தற்போது ப்ராஜக்ட் கே என அழைக்கப்பட்டு வருகின்றது.

இதை தீபிகா படுகோன் ஹீரோயினாக நடிக்கும் நிலையில் மற்றொரு ஹீரோயின் ரோலில் திஷா பதானி தற்போது நடிக்க இருக்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது. அதை அந்த நடிகையும் உறுதியாக அறிவித்து உள்ளார்.

Advertisement

Advertisement