• Sep 21 2024

ஏகப்பட்ட எதிர்பார்ப்புடன் வெளியாகவுள்ள பிரபாஸின் மெகா 'புராஜெக்ட் கே' படம்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமா கொண்டாடும் முக்கிய நடிகராக விளங்குபவர் பிரபாஸ். 2002-ஆம் ஆண்டு வெளிவந்த 'ஈஸ்வர்' திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார். மேலும் 'வர்ஷம்' என்ற 2004-ஆம் ஆண்டு வெளியான திரைப்படத்தின் மூலம் இவர் புகழடைந்தார். அத்துடன் இவரது நடிப்பில் வெளியாகிய 'மிர்ச்சி, முன்னா, டார்லிங், மிஸ்டர், பெர்ஃபெக்ட் உள்ளிட்ட திரைப்படங்கள் இவரது வெற்றிப் படங்கள் ஆகும்.

இவர் தமிழில் நடித்த பாகுபலி, மற்றும் பாகுபலி 2 படமானது இவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடித்தந்தது. தனது தனித்துவமான நடிப்பின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனி இடம் பிடித்த இவர் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ளார்.

தொடர்ந்து பல வெற்றிப் படங்களைக் கொடுத்த இவர் தற்போது கேஜி எஃப் பட இயக்குனர் பிரசாந்த் நீல்ஸ் இயக்கும் 'சலார்' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இருப்பினும் தற்போது பிரபாஸ் அடுத்து நடிக்கவிருக்கும் புதிய திரைப்படம் குறித்த தகவல்கள் இணையத்தில் வெளிவந்துள்ளன.

அதாவது, மகா நடி படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கி வரும் 'புராஜெக்ட் கே' படத்தின் ஹீரோவாக பிரபாஸும் அவருக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனும் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாகவுள்ள இப்படத்தில் பிரபாஸ்- தீபிகாவுடன் இணைந்து அமிதாப் பச்சன், திஷா பதானி உள்ளிட்டோர் நடிக்கவுள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் 2021 ஜூலையில் ஆரம்பமானது தற்போது ஷூட்டிங்க நடந்து வரும் நிலையில் இப்படம் 2023- இல் தான் முடியும் எனவும், 2024 இல் தான் இப்படம் ரிலீஸ் செய்யப்படும் என்று படக்குழுவினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் இந்தியாவில் 10 மொழிகளில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகிறது. இப்போதில் இருந்து ரசிகர்கள் ஏகப்பட்ட எதிர்பார்ப்புடன் காணப்படுவதைக் காணலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement