• Sep 21 2024

பொண்ணு பார்த்தாச்சு திருமணத்திற்கும் ரெடி- மகிழ்ச்சியான செய்தியைக் கூறிய பிரபாஸின் மாமா

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் நடிகர் பிரபாஸ். வர்ஷம் என்ற 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து பாகுபலி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பலரது மனதில் ஆட்சி செய்து வருகின்றார் .இவர் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக விளங்குவதோடு இவருக்கு தமிழிலும் ஏராளமான ரசிகர் கூட்டம் உள்ளன.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ராதேஷ்யாம் திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை கொடுக்காது கலவையான விமர்சனங்களை பெற்று தந்தன.

திரைவாழ்க்கை தவிர்த்து நிஜவாழ்க்கையில் பிரபாஸுக்கு எப்போது திருமணம் நடக்கும் என்று பலரும் எதிர்பார்த்து வருகின்றனர். பல பேட்டிகளில் திருமணம் குறித்து தெளிவான கேள்வி எழுப்பப்பட்டால் அவர் பதில் எதுவும் அளிக்காமல் சிறிய புன்னகையுடன் சிரித்து சமாளித்து செல்லும் சென்று விடுவார்.

அவரிடம் நீங்கள் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று கேட்கப்பட்டதற்கு அவர் "அவரின் காதல் எப்போதுமே தவறாகி விடுகிறது அதனால் தான் எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை" என்று கூறினார்.

இந்நிலையில் தற்போது அவரது திருமணம் குறித்து அவரது மாமா சில விஷயங்களை தெரிவித்துள்ளார்.

அதாவது பிரபாஸுக்கு மணமகளை தேர்வு செய்துவிட்டோம் எனவும் இந்த வருடத்தில் திருமணம் நிச்சயம் நடக்கும் என்றும் திருமண திகதி விரைவில் வெளியிடப்படும் எனவும் கூறியுள்ளார்.

இவர் பேசிய இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது.

பிற செய்திகள்:

  1. “எங்கேயும் எப்போதும் எதுவேண்டுமானாலும் செய்யலாம்”- படப்பிடிப்புத் தளத்திலும் முரட்டுத்தனமாக பயிற்சி செய்யும் சூரி
  2. செய்தியாளர்களைச் சந்தித்த விக்னேஷ்சிவன் மற்றும் நயன்தாரா- என்ன சொல்லியிருக்கிறாங்க தெரியுமா?

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement