தென்னிந்திய சினிமாவில் தமக்கென்று ரசிகர் பட்டாளத்தை சேர்த்த முன்னணி நடிகர்கள் இருக்கின்றனர். இவர்களில் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் சிரஞ்சீவி. இவர் தற்பொழுது காட்பாதர்’ என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இப்படத்தின் மீது ஹிந்தி மற்றும் தெலுங்கு ரசிகர்கள் ஏற்கனவே உற்சாகத்தில் இருக்கும் நிலையில், தற்போது தமிழ் ரசிகர்களுக்கு ஒரு சுவாரசியமான செய்தி வெளியாகியுள்ளது. அதாவது காட்பாதரின் இசையமைப்பாளர் தமன் தனது ட்விட்டர் பக்கத்தில், சிரஞ்சீவி, இயக்குநர் மோகன் ராஜா மற்றும் பிரபல நடன இயக்குனர் பிரபு தேவாவுடன் இணைந்து அவரை வரவேற்க ஒரு புகைபடத்தைப் பகிர்ந்துள்ளார்.
அதாவது காட்பாதரில் சிரஞ்சீவி மற்றும் சல்மான் கானின் சிறப்புப் பாடலுக்கு தமன் இசையமைக்க பிரபுதேவா நடனம் அமைக்கிறாராம். தீவிர அரசியல் படம் என்று கூறப்படும் காட்பாதர் மலையாளப் படமான லூசிஃபரின் அதிகாரப்பூர்வ தெலுங்கு ரீமேக் ஆகும்.
மோகன் ராஜா இயக்கும் இப்படத்தை கொனிடேலா புரொடக்ஷன் நிறுவனம் மற்றும் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. நயன்தாரா நாயகியாக நடிக்க, சத்யதேவ் காஞ்சரனா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிறசெய்திகள்:
- பிரபல நிகழ்ச்சியில் நடிகர், தொகுப்பாளினி இடையே வெடித்த சண்டை-வைரல் வீடியோ..!
- பிரபல டிவி நடிகரை காதலிக்கும் ஏமி ஜாக்சன்? விரைவில் திருமணமா..!
- காதலியை ரகசியமாக பதிவு திருமணம் செய்த லோகேஷ் கனகராஜ்? கசிந்த வீடியோ..!
- காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் சமந்தா வேடத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகை தானாம்-விக்னேஷ் சிவன்
- “நானே வருவேன்” திரைப்படத்தில் இத்தனை பாடல்கள் இருக்கின்றதா?- முதல் சிங்கிள் ரிலீஸ் எப்போது தெரியுமா?
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!