கோலிவுட்டின் சீனியர் நடிகரான பிரபு தற்போதும் பல படங்களில் பிஸியாக நடித்து வருகின்றார்.அத்தோடு கடந்த மாதம் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார்.
இவ்வாறுஇருக்கையில், சில தினங்களுக்கு முன்னர் கிட்னி ஸ்டோன் பிரச்சினை காரணமாக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.லேசர் அறுவை சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பிய பிரபுவின் தற்போதைய ஹெல்த் அப்டேட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
மறைந்த நடிகர் திலகம் சிவாஜியின் மகன் பிரபுவும் கோலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வருகிறார். கதாநாயகனாக கலக்கி வந்த பிரபு தற்போது பல படங்களிலும் முக்கியமான பாத்திரங்களில் மட்டும் நடித்து வருகிறார். அத்தோடு கடந்தாண்டு காத்துவாக்குல ரெண்டு காதல், பொன்னியின் செல்வன், நானே வருவேன் போன்ற படங்களில் நடித்திருந்தார். அதேபோல் கடந்த மாதம் பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸான விஜய்யின் வாரிசு படத்திலும் கெஸ்ட் ரோல் செய்திருந்தார்.
இவ்வாறுஇருக்கையில், சில தினங்களுக்கு முன்னர் உடல்நிலை பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.சிறுநீரகத்தில் கற்கள் இருந்ததால் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள மெட்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
மேலும் யூரித்ரோஸ்கோப்பி லேசர் அறுவை சிகிச்சை மூலம் அவருக்கு சிறுநீரகக் கற்கள் அகற்றப்பட்டன. அதனைத் தொடர்ந்து ஓரிரு நாட்கள் மருத்துவமனையில் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்த பிரபு, அதன்பின்னர் வீடு திரும்பினார். ஒரு வாரமாக வீட்டில் ஓய்வெடுத்து வரும் பிரபு தற்போது நலமுடன் இருப்பதாக சொல்லப்படுகின்றது.
இன்னும் சில நாட்கள் ஓய்வெடுத்துவிட்டு அதன் பின்னர் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என சொல்லப்படுகிறது. மணிரத்னம் இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் பெரிய வெள்ளாளர் பூதி விக்ரமகேசரி என்ற பாத்திரத்தில் நடித்திருந்தார். அத்தோடு பிரபுவின் இந்த கேரக்டர் ரசிகர்களிடம் கவனம் பெற்றது. அதே படத்தில் அவரது மகன் விக்ரம் பிரபுவும் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஏப்ரல் 28ம் தேதி பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வெளியாகிறது. முன்னதாக முதல் பாகத்தின் இசை வெளியீட்டு விழா உட்பட பொன்னியின் செல்வன் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டிருந்தார் பிரபு. அதேபோல், பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் பிரபு கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Listen News!