ஜெயம் ரவி நடிப்பில் வெளியான படத்தின் மூலம் இயக்குநராக அறியப்பட்டவர் தான் பிரதீப் ரங்கநாதன். இந்த படத்தில் காஜல் அகர்வால், யோகிபாபு, சம்யுக்தா, கே. எஸ் ரவிக்குமார், பொன்னம்பலம் என பலர் நடித்து இருந்தனர்.
காமெடி டிராமாவாக உருவான இந்த படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.இதைத் தொடர்ந்து பிரதீப், லவ் டுடே படத்தை இயக்கி நடித்து உள்ளார். இதில் நடிகர் சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். கதாநாயகியாக இவானா நடித்துள்ளதோடு ராதிகா சரத்குமார், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளனர்.
யுவன் ஷங்கர் ராஜாவின் இசை படத்திற்கு பெரும் பலம் சேர்த்துள்ளது. இந்த படம் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் கடந்த நவம்பர் 4, 2022 ஆம் தேதி முதல் வெளியாகி உள்ளது. இந்த படம் ரசிகர்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், இப்படத்தின் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படத்தின் BTS வீடியோவை பகிர்ந்திருக்கிறார். படத்தில் வரும் சிறுமி ஒருவனுக்கு நடிக்க கற்றுக்கொடுக்கும் பிரதீப், டயலாக் சொன்னதும் கீழே முழங்காலிட்டு அழுவது போல நடிக்கும்படி சொல்கிறார். பின்னர் அதுபோல நடித்தும் காட்டுகிறார். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
Listen News!