ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் தான் பிரதீப் ரங்கநாதன். அத்தோடு கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான அப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதையடுத்து மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் பிரதீப் லவ் டுடே என்ற படத்தை இயக்கினார்.
இயக்கியது மட்டுமல்லாமல் பிரதீப் அப்படத்தில் நாயகனாகவும் நடித்திருந்தார்.அத்தோடு கடந்தாண்டு நவம்பர் மாதம் வெளியான லவ் டுடே திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்று மிகப்பெரிய வெற்றிப்படமாக மாறியது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றிபெற்ற லவ் டுடே படத்திற்க்கு பின்னர் பிரதீப் கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பான பிரபலமானார்.
எனினும் இதையடுத்து தற்போது பிரதீப் சூப்பர்ஸ்டார் ரஜினியிடம் ஒரு கதை கூறியுள்ளதாக தகவல்கள் வருகின்றன. இவ்வாறுஇருக்கையில் பிரதீப் அடுத்ததாக இயக்கும் படத்திற்கு ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.
இதைத்தொடர்ந்து தற்போது வந்த தகவலின் படி பிரதீப் அடுத்ததாக சிம்பு நடிப்பதாக இருந்த கொரோனா குமார் படத்தில் நாயகனாக நடிக்கப்போவதாக பேசப்பட்டு வருகின்றது. கோகுல் இயக்கத்தில் சிம்பு கொரோனா குமார் படத்தில் நடிப்பதாக இருந்தது.
ஆனால் ஒரு சில காரணங்களால் சிம்பு இப்படத்தில் இருந்து வெளியேற கொரோனா குமார் படம் கைவிடப்பட்டதாக பேசப்பட்டது. எனினும் தற்போது இப்படத்தில் சிம்புவிற்கு பதிலாக பிரதீப் நடிக்கவிருப்பதாக தகவல் வருகின்றது. இத்தகவல் உண்மையாகும் பட்சத்தில் விரைவில் இதைப்பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
Listen News!