தமிழ் சினிமாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான கோமாளி திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியவர் தான் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி இருந்தார்.
இதனைத் தொடர்ந்து இவரே இயக்கி நடித்த திரைப்படம் தான் லவ்டுடே.இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.இப்படத்தில் கதாநாயகியாக இவானா நடித்திருந்தோடு சத்தியராஜ் மற்றும் ராதிகா ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.
இப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்படவுள்ளது.இந்த நிலையில், இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்த பிரதீப் ரங்க நாதன் தன் டுவிட்டர் பக்கத்தில், இதைவிட வேறென்ன கேட்க முடியும்? சூரியனுக்கு அருகில் நிற்பது போலிருந்தது.
இறுக்கமான அணைப்பு, கண்கள், சிரிப்பு, ஸ்டைலிஸ் அவரது ஆளுமை எல்லாம் சூப்பர் ஸ்டாரை பார்த்தபோது,. லட் டுவ்டே படத்திற்காக அவர் என்னை பாராட்டினார். அவர் கூறியதை நான் என்றும் மறக்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார். இவரின் இந்த பதிவு வைரலாகி வருவதையும் காணலாம்.
Listen News!