பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது அக்டோபர் மாதம் 1ம் தேதியிலிருந்து ஆரம்பமாகி ஒளிபரப்பாகி வருகின்றது.இந்நிகழ்ச்சியில் 9 ஆண் போட்டியாளர்கள், 9 பெண் போட்டியாளர்கள் என மொத்தம் 18 பேர் பங்கேற்று உள்ளனர். ஆரம்பித்த நாளிலிருந்து பல டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டதால் போட்டியாளர்கள் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.
நேற்றைய தினம் ஒரு டாஸ்க் நடைபெற்றது. அதாவது பெண் போட்டியாளர்கள் தோற்றால், அவர்களின் மேக்கப் பொருட்களை பிக்பாஸிடம் கொடுத்துவிட வேண்டும் என்று கூறப்பட்டது. இதற்கு பிரதீப் சொன்ன கமெண்ட் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேக்கப்பை கலைத்தால் தான் பெண்களின் உண்மை முகம் வெளியவரும், அதனை பார்க்க விரும்புவதாக கூறி இருந்தார்.
இதனால் பெண் போட்டியாளர்கள் அனைவரும் அவர் மீது கடும் கோபத்தில் இருந்தனர். இதனை அடுத்து விசித்திராவிடம் தவறாகப் பேசியுள்ளார். அது குறித்த வீடியோவும் வைரலாகி வருகின்றது.அதில் அவர் கூறியதாவது ஆணும், பெண்ணும் ஒரே பெட்டில் படுக்க வேண்டும் என்று பிக்பாஸ் தண்டனை கொடுக்க வேண்டும் என பிரதீப் கூறியதை கேட்டு ஷாக்கான விசித்ரா, அப்படி சொன்னால் நீங்க பண்ண மாட்டீங்களே என சொல்ல, அதற்கு பிரதீப் நான் பண்ணுவேன் என கூறுகிறார்.
உடனே விசித்ரா மைக் மூலம் பிக்பாஸிடம், இவர் சொன்ன டாஸ்க் நடந்தாகனும் கேட்டதோடு, இவர் மட்டும் தைரியமா என்கூட படுத்து தூங்கிட்டா, என் பெயரை மாத்திக்கிறேன் என சவால் விட்டுள்ளார். பின்னர் டென்ஷன் ஆன விசித்ரா, அது எப்படி நீ என்கூட பெட்ல படுத்து தூங்கனும்னு சொல்லலாம் என கேட்க, உடனே பிரதீப், நான் பெட்ல படுத்து தூங்கனும்னு சொல்லல, உங்க பக்கத்துல படுத்து தூங்கனும்னு தான் சொன்னேன் என மழுப்பினார். நீ வாடா உன்னை ஒரே அடியா தூங்க வச்சிடுறேன் என விசித்ரா பேசும் இந்த வீடியோ வைரலாகி வருகிறது
#PradeepAntony expresses his deed to sleep with #Vichitra aunty 🙄🙄
Dai enna kandraavi aasai da unaku 😂😂
Ivan therinju than pesuran ah ?? Chaik 👎👎#BiggBoss7tamil #biggbosstamil7 #biggbosstamil pic.twitter.com/WlaYpuZtS5
Listen News!