நடிகர் பார்த்திபன் இயக்கிய இரவின் நிழல் திரைப்படம் கடந்த ஜூலை 15-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்று வருகின்றது. மேலும் இப்படத்தை ஒரே ஷாட்டில் படமாக்கி உள்ள பார்த்திபன், உலகிலேயே நான் லீனியர் முறையில் படமாக்கப்பட்ட முதல் சிங்கிள் ஷாட் திரைப்படம் இதுதான் எனக் கூறி விளம்பரப்படுத்தி இருந்தார்.
இதனை சர்ச்சைக்குரிய விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் கடுமையாக விமர்சித்து இருந்தார்.எனினும் குறிப்பாக இது முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படம் என பார்த்திபன் கூறிவது பொய் என்றும், கடந்த 2013-ம் ஆண்டு வெளியான பிஷ் அண்ட் கேட் என்கிற ஈரானிய படம் தான் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படம் என்று ஆதாரங்கள் சிலவற்றை வெளியிட்டு இருந்தார்.
இதனால் கடுப்பான பார்த்திபன் ரசிகர்கள் ப்ளூ சட்டை மாறனின் உருவ பொம்மையை செருப்பால் அடித்தும், தீயிட்டு எரித்தும் கண்டனம் தெரிவித்து இருந்தார்கள். இதற்கெல்லாம் அசராத மாறன் பார்த்திபனை சாடி தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் அவரை மல்டி டேலன்டட் ஃபிராடு என திட்டியும் கூறியுள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
மேலும் அதில் அவர் பேசியதாவது …
“ஆதாரங்களை வெளியிட்டும் அதற்கு விளக்கம் கொடுக்காமல் ஏதேதோ பேசி வருகிறார் பார்த்திபன். உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படம் எனக்கூறி 12 கோடி தமிழர்களை ஏமாற்றி இருக்கிறீர்கள். எனினும் இப்படி செய்தால் உங்களை இப்போ மல்டி டேலன்டட் இயக்குநர் என சொல்பவர்கள் அப்புறமா இவர் ஒரு மல்டி டேலன்டட் ஃபிராடுனு சொல்வார்கள். அவ்ளோதான்” என கூறியுள்ளார்.
பிற செய்திகள்
- குக்விக் கேமாளி புகழா இது…சூப்பர் ஸ்டார் போல் மாறியுள்ளார்..வைரல் புகைப்படம்..!
- சூர்யாவுக்கு தேசிய விருது கிடைச்சது இப்படித்தானா- புதுக் காரணத்தை கிளப்பிய ப்ளூ சட்டை மாறன்
- என்னம்மா இது… லாஸ்லியாவிடம் பல கேள்விகளை கேட்டு வரும் ரசிகர்கள்…!
- திடீரென இணையத்தில் கசிந்த நடிகர் சூர்யாவின் சொத்து மதிப்பு..!
- இனிமேல் படங்கள் இயக்கமாட்டேன் – பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!